மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இந்தியர்..! துப்புக்கொடுத்தால் 74 லட்ச ரூபாய் பரிசு..! எஃப்.பி.ஐ அறிவிப்பு..!

1 December 2020, 3:39 pm
FBI_UpdateNews360
Quick Share

அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்.பி.ஐ) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பத்ரேஷ்குமார் சேட்டன்பாய் படேலை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்ததோடு, அவர் குறித்து  கொடுப்பவர்களுக்கு 1,00,000 டாலர் பரிசை அறிவித்துள்ளது. அவர் எஃப்.பி.ஐ’யால் 2017 முதல் மிகவும் தேடப்படும் 10 குற்றவாளிகளில் ஒருவராக பட்டியலிடப்பட்டுள்ளார்.

2015’இல் மேரிலாந்து மாநிலத்தின் ஹனோவரில் உள்ள டங்கின் டோனட்ஸ் காபி கடைக்குள் தனது மனைவி பாலக்கை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் படேல் 2015 முதல் தலைமறைவாக இருந்து வருகிறார்.

அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் குறித்து தகவல் தருபவர்களுக்கு 2017’ஆம் ஆண்டில், 1,00,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ 74 லட்சம்) வெகுமதியுடன் அவர் பட்டியலில் சேர்க்கப்பட்டாலும், அவர் பிடிபடவில்லை. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை எஃப்.பி.ஐ அவரைப் பற்றிய தகவல்களையும், வழக்கு மற்றும் கவனத்தை ஈர்க்கும் வெகுமதியையும் ட்வீட் செய்தது.

அவர் எங்கிருக்கிறார் என்று தகவல் தெரிந்த எவரையும் எஃப்.பி.ஐஅல்லது அருகிலுள்ள அமெரிக்க தூதரகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு எஃப்.பி.ஐ கேட்டுக் கொண்டுள்ளது. அவர் குஜராத்தில் உள்ள காந்த்ரோடி தா விராம்காமில் பிறந்தார் என்று எஃப்.பி.ஐ மேலும் தெரிவித்துள்ளது.

Views: - 16

0

0