அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பாதிவிலையில் கிடைக்கும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி?….

23 November 2020, 8:59 am
corona_vaccine_updatenews360
Quick Share

லண்டன்: அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் பாதிவிலையில் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா தொற்று நோய்க்கு தடுப்பூசி ஆக்ஸ்போர்ட் கோவிஷீல்டு மருந்து ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் அரசுக்கு கிடைக்க உள்ள நிலையில் அது 50 சதவீத விலை குறைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டுடன் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் முடிவடைய உள்ள நிலையில் முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கும் இந்த மருந்து பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Oxford University Coronavirus Vaccine's 500 Human Trials Begin From Thursday

மேலும் அவசர சிகிச்சைக்கு மருந்தை பயன்படுத்துவதற்கு இங்கிலாந்து அரசின் ஒப்புதலை அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் , சீரம் நிறுவனத்துக்கு இந்த மருந்து இரண்டு மாதங்களில் கிடைக்கலாம் என்றும் நிர்ணயிக்கப்பட்ட விலையான 500 அல்லது 600 ரூபாயில் இந்தியாவுக்கு பாதி விலையில் கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

2021 மார்ச்-ஏப்ரல் மாதத்திற்குள் கோவிஷீல்டு மக்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்று சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார். 2 டிகிரி செல்சியஸ் முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையில் சேமிக்கக்கூடிய இந்த தடுப்பூசி, பொது மக்களுக்கு தனியார் சந்தையில் ரூ .500 முதல் 600 ரூபாய் வரை கிடைக்கும் என்று பூனவல்லா தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0