அமெரிக்காவில் 100க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இணைய தாக்குதல்….அதிர்ச்சி தகவல்!!

29 October 2020, 9:25 am
FBI - updatenews360
Quick Share

அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான மருத்துவமனைகளில் சைபர் கிரைம் தாக்குதல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

போஸ்டன்: அமெரிக்க சுகாதாரத் துறை அமைப்பிற்கு எதிராக சைபர் கிரிமினல்கள் ஒரு பெரிய தாக்குதலை கட்டவிழ்த்து விடுகின்றன என அமெரிக்க உளவுத்துறை எச்சரித்து விடுத்துள்ளது.

இதுகுறித்து, உளவுத்துறை வல்லுநர்கள் கூறுகையில், ஏற்கனவே இந்த மாதத்தில் 4 அமெரிக்க மருத்துவமனைகள் சைபர் கிரைம் தாக்குதல்களை சந்தித்துள்ளதால் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீங்கிழைக்கும் மென்பொருட்கள் மூலம் இந்த துறையை தாக்க இலக்கு வைத்துள்ளனர், இது தரவு திருட்டு மற்றும் சுகாதார சேவைகளை சீர்குலைக்க வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா இதுவரை கண்டிராத மிக முக்கியமான இணைய பாதுகாப்பு அச்சுறுத்தலை சந்தித்து வருவதாக சைபர் பாதுகாப்பு நிறுவனமான மாண்டியண்டின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி சார்லஸ் கார்மகல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அடுத்த சில வாரங்களில் இந்த குழு நூற்றுக்கணக்கான மருத்துவமனைகளில் சைபர் கிரைம் தாக்குதல் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 24

0

0