கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு வலுக்கும் எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டத்தால் ஸ்தம்பித்த ஆஸ்திரேலியா..!!

Author: Rajesh
13 February 2022, 12:39 pm
Quick Share

சிட்னி: கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிராக கனடா, நியூசிலாந்து போன்ற பல நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவிலும் தடுப்பூசிக்கு எதிராக போராட்டங்கள் ஆரம்பமாகி உள்ளது.

கனடாவில் எல்லை கடந்து செல்லும் லாரி ஓட்டுநர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் என அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுதந்திர அணிவகுப்பு என்ற பெயரில் தலைநகர் ஒட்டாவாவில் தொடங்கிய இந்த போராட்டம் தற்போது நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது.

இதேபோல், நியூசிலாந்தின் வெலிங்டனில் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் பீஹைவ் பாராளுமன்றத்திற்கு அருகில் 5வது நாளாக போராடி வருகின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் டிரக்குகள், வேன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுடன் பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பல வீதிகளை ஆக்கிரமித்துத் தடுத்துள்ளனர்.

இந்நிலையில் மக்கள், பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி நேற்று அணிவகுத்தனர், சிலர் தேசிய சட்டங்கள் தங்களுக்குப் பொருந்தாது என்றும் தெரிவிக்கும் பாதாகைகளை ஏந்தி இருந்தனர். மேலும் உங்கள் சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்காகப் போராடுங்கள் மற்றும் கட்டாய மருந்துகள் வேண்டாம் என்று எழுதப்பட்ட பதாகைகளைக் ஆர்ப்பாட்டக்காரர்கள் காட்டியதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Views: - 672

0

0