அழகழகான ஏரிகள் சூழ்ந்த பின்லாந்து பற்றிய பல சுவாரஸ்யங்கள்

2 March 2021, 9:03 am
Quick Share

வடக்கு ஐரோப்பியப் பகுதியில் அமைந்திருக்கும் அழகான நாடு பின்லாந்து. அழகழகான ஏரிகள் இங்கு அமைந்திருப்பதால், பின்லாந்து “ஏரிகளின் நாடு” என்று அழைக்கப்படுகிறது. இந்த நாட்டில் 1 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் இருக்கின்றன. அவை நாட்டுக்கு பேரழகைக் கொடுக்கின்றன. அதுதவிர பின்லாந்தில் என்னென்ன சுவாரஸ்யங்கள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்வோம்.

பின்லாந்தில் வானிலை எப்போதும் ரம்மியமாகவே இருக்கும். கோடை காலங்களில் மிகக் குறைந்த வெயிலுடன் இரவு 10 மணி வரைக்கும் பகல் பொழுது போலவே இருக்கும். அதேபோல குளிர்காலங்களில் பகல் பொழுதுகூட இரவு போல இருட்டாகவே இருக்கும். மதிய நேரத்தில் மட்டும் சிறிது நேரம் சூரியனைப் பார்க்க முடியும்.

பின்லாந்தில் மிக சுவாரஸ்யமான போட்டி ஒன்றும் நடத்தப்படுகிறது. இங்கு தங்கள் மனைவியை முதுகில் தூக்கும் போட்டி நடக்கிறது. இதில் யார் அவரது மனைவியை முதுகில் தூக்குகிறார்களோ அவருடைய மனைவியின் எடையின் அளவுக்கு இலவசமாக பீர் பரிசாக வழங்கப்படுகிறது.

அதேபோன்று பின்லாந்தில் போக்குவரத்துக் கட்டணங்கள் கூட வித்தியாசமான முறையிலேயே வசூலிக்கப்படுகின்றன. மக்கள் பயணங்கள் மேற்கொள்ளும்போது, அவரவர் சம்பளத்துக்கு ஏற்றபடி டோல்கேட் கட்டணம் வசூல் செய்கிறார்கள். அதனாலேயே பெரும்பாலானவர்கள் தங்களுடைய சம்பளத்தைக் குறைவாகக் கூறி, டோல்கேட் கட்டணத்தையும் குறைவாகச் செலுத்துகிறார்கள்.

‘டோர்னியோ’ என்ற பெயரில் ஒரு கோல்ஃப் மைதானம் இருக்கிறது. இந்த மைதானத்தின் சிறப்பு என்ன தெரியுமா? இந்த மைதானத்தின் பாதி பின்லாந்து நாட்டு எல்லைக்குள்ளும் பாதி சுவீடன் நாட்டு எல்லையிலும் அமைந்திருக்கிறது. அதாவது இந்த கோல்ஃப் மைதானத்தில் மொத்தம் 18 துளைகள் உள்ளன. அவற்றில் ஒன்பது துளைகள் பின்லாந்திலும் மீதமுள்ள ஒன்பது சுவீடனிலும் உள்ளன. இந்த மைதானத்தில் விளையாடுபவர்கள் இரண்டு நாட்டின் மைதானங்களிலும் விளையாடிய திருப்தியான உணர்வைப் பெறலாம்.

Views: - 5

0

0