நவீன மின்னணு சாதனங்கள் மூலம் ஈரான் விஞ்ஞானி படுகொலை..! இஸ்ரேல் மீது பகிரங்கக் குற்றச்சாட்டு..!

30 November 2020, 4:43 pm
Iran_Nuclear_Scientist_Funeral_UpdateNews360
Quick Share

2000’களில் ஈரானின் இராணுவ அணுசக்தி திட்டத்தை நிறுவிய ஒரு விஞ்ஞானியை கொல்ல இஸ்ரேல் மின்னணு சாதனங்களை பயன்படுத்தியதாக ஈரானிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இன்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். நாட்டின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி ஷம்கானி, மொஹ்சென் ஃபக்ரிசாதேவின் இறுதிச் சடங்கில் இந்த கருத்தைத் தெரிவித்தார்.

கடந்த பத்தாண்டுகளில் ஈரானிய அணு விஞ்ஞானிகளைக் கொன்றதாக நீண்டகாலமாக சந்தேகிக்கப்படும் இஸ்ரேல், தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

ஈரானின் ஏஎம்ஏடி திட்டத்திற்கு ஃபக்ரிசாதே தலைமை தாங்கினார். இஸ்ரேலும் மேற்குலக நாடுகளும், ஈரான் ஒரு அணு ஆயுதத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் 2003’இல் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது என்று சர்வதேச அணுசக்தி நிறுவனம் கூறுகிறது. யு.எஸ். புலனாய்வு அமைப்புகளும் அந்த மதிப்பீட்டை 2007 அறிக்கையில் ஒப்புக் கொண்டன.

ஆனால் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டம் மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் பற்றிய ஆராய்ச்சியை சுட்டிக்காட்டி, அணு ஆயுதங்களை வளர்ப்பதற்கான லட்சியத்தை ஈரான் இன்னும் பராமரிக்கிறது என்று இஸ்ரேல் வலியுறுத்துகிறது. ஈரான் நீண்டகாலமாக தனது அணுசக்தி திட்டத்தை அமைதியாக வைத்திருக்கிறது.

ஷம்கானியின் கருத்துக்கள் வெள்ளிக்கிழமை ஃபக்ரிசாதே கொல்லப்பட்ட விஷயத்தை அதிக சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ளது. அதிகாரிகள் ஆரம்பத்தில் ஒரு லாரி வெடித்ததாகவும் பின்னர் துப்பாக்கி ஏந்தியவர்கள் விஞ்ஞானி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அவரைக் கொன்றதாகவும் அதிகாரிகள் கூறினர்.

தாக்குதல் நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட ஒரு ஆயுதம் இஸ்ரேலிய இராணுவத் துறையின் சின்னம் மற்றும் விவரக்குறிப்புகளுடன் உள்ளது என்று ஈரான் அதிகாரப்பூர்வ ஊடகமான பிரஸ் டிவி முன்பு அறிவித்தது. அதில் தாக்குதலுக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் செயற்கைக்கோளால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்று கூறியது.

ஆனால் இந்த கருத்துகளுக்குத் தேவையான ஆதாரங்களை யாரும் வழங்கவில்லை. இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு ஏதாவது ஒரு வகையில் ஈரான் நிச்சயம் பழிதீர்க்கும் எனக் கூறப்படுகிறது.

Views: - 0

0

0