ரஷ்யாவுடன் இணைந்து ஈரானில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி..! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

6 September 2020, 10:11 am
Corona_Vaccine_Russia_UpdateNews360
Quick Share

ஈரானில் கொரோனா பாதிப்புகள் நேற்று 3,84,666’ஆக உயர்ந்துள்ள நிலையில், ஈரானில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க ஈரானும் ரஷ்யாவும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இதற்கிடையில், ஈரானிய சுகாதார அதிகாரி ஒருவர் தினசரி 4,644 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதால் குடிமக்கள் கொரோனா வைரஸின் தீவிரத்தை குறைக்கக் கூடாது என்று எச்சரித்தனர்.

ஆரம்ப கட்டத்தில் சீனாவை அடுத்து, அதிக கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருந்த ஈரான், மத்திய கிழக்கு நாடுகளில் மிக அதிகமான கொரோனா தொற்றுக்களை கொண்டுள்ளது. 

இந்த தொற்றுநோய் இதுவரை ஈரானில் 22,154 உயிர்களைக் கொன்றது. மொத்தம் 3,32,131 கொரோனா வைரஸ் நோயாளிகள் குணமடைந்துள்ளனர். 3,708 பேர் இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இதற்கிடையே கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் உலகளாவிய போட்டியில், அனைவரையும் முந்திக்கொண்டு ரஷ்யா தனது முதல் தடுப்பூசியான ஸ்புட்னிக்கை பதிவு செய்துள்ளது. 

இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை குறித்த தகவல்கள் எதுவும் இல்லாத நிலையில், உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை தெரிவித்திருந்தாலும் ரஷ்யாவின் தடுப்பூசியப் பெற பல நாடுகள் முன்வந்துள்ளன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்பதில் ஈரான்-ரஷ்யா ஒத்துழைப்பு குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை மாஸ்கோவுக்கான ஈரானின் தூதர் கசெம் ஜலாலி மற்றும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ் ஆகியோருக்கு இடையிலான ஆன்லைன் சந்திப்பில் மேற்கொள்ளப்பட்டதாக ஈரானிய செய்தி நிறுவனம் பார்ஸ் நேற்று தெரிவித்துள்ளது.

Views: - 6

0

0