மரண தண்டனைக் கூடாரமான கால்பந்து மைதானம்..! ஆப்பிரிக்காவில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெறிச்செயல்..!

10 November 2020, 7:52 pm
ISIS_Terrorists_UpdateNews360
Quick Share

ஒரு ஆப்பிரிக்க நாட்டில், இஸ்லாமிய போராளிகளால் 50’க்கும் மேற்பட்டோர் தலை துண்டிக்கப்பட்டு கொள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதக் குழுவான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு, வடக்கு மொசாம்பிக்கில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த கோரச்செயலை அரங்கேற்றியுள்ளது.

இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஒரு கால்பந்து ஆடுகளத்தை மரணதண்டனை களமாக மாற்றி உடல்களைத் தலைகீழாகக் கட்டி கொன்றதாகக் கூறப்படுகிறது. மேலும் வெள்ளிக்கிழமை இரவு நஞ்சாபா கிராமத்தில் சோதனை நடத்தி வீடுகளுக்கு தீ வைத்து பயங்கரவாதிகள் அல்லாஹு அக்பர் என்று கோஷமிட்டனர்.

அந்நாட்டு ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி வெளியான ஒரு அறிக்கையில், வேறு சிலரும் வேறொரு கிராமத்தில் தலை துண்டிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 2017 முதல் காபோ டெல்கடோ மாகாணத்தில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் இந்த கொலைகள் சமீபத்தியவையாகும்.

முக்கியமாக முஸ்லீம்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த மாகாணத்தில் குறைந்தது 2,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மற்றும் 4,00,000’க்கும் மேற்பட்ட மக்கள் வீடற்றவர்களாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிராந்தியத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதிகள், தற்போது தென்னாப்பிரிக்காவிலும் செயல்பட காலடி எடுத்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பிராந்தியத்தில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதற்கான அதன் நோக்கத்தில், இந்த குழு வேலையின்மை மற்றும் வறுமையை பயன்படுத்தி, இளைஞர்களை தனது அணிகளில் சேர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.

மாகாணத்தில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் அதன் எரிவாயு மற்றும் ரூபி தொழில்கள் இருந்தபோதிலும், அவர்களிடமிருந்து சிறிதளவு பயனடைந்துள்ளனர் என்று புகார் கூறுகின்றனர்.

சமீபத்திய தாக்குதல் பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதல்களில் மிக மோசமானது என்று கூறப்படுகிறது. தாக்குதல்களின் மூர்க்கத்தன்மை உள்ளூர் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர்கள் மோதலை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

Views: - 28

0

0