ஒரு முகக்கவசத்தின் விலை இத்தனை கோடியா..! அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள்

11 August 2020, 12:36 pm
Quick Share

உலகின் விலை உயர்ந்த முகக்கவசத்தை இஸ்ரேலைச் சேர்ந்த நகை நிறுவனமொன்று தயாரித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக உலகம் முழுவதும் உள்ள மக்கள் முகக்கவசங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த முகக்கவசங்கள் தற்போது ஆபரங்களுக்கு இணையாக மார்க்கெட்டில் வரவேற்கப்படுகிறது.

இனி மனித வாழ்க்கையில் முகக்கவசங்களின் பங்கு இன்றியமையாததாக இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், மார்க்கெட்டில் விதவிதமான முகக்கவசங்கள் விற்பனைக்காக வந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில், உலகின் விலை உயர்ந்த முகக்கவசத்தை இஸ்ரேலைச் சேர்ந்த நகை நிறுவனமொன்று தயாரித்துள்ளது. இதன் விலை 1.5 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 11 கோடியே 23 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் பிரபல நகை நிறுவனமான யவேல் காமெனி உலகின் விலை உயர்ந்த முகக் கவசத்தை தயாரித்துள்ளது. 18 காரட் எடை கொண்ட தங்கத்திலான இந்த முகக்கவசம் சுமார் 3 ஆயிரத்து 600 எண்ணிக்கை கொண்ட வெள்ளை மற்றும் கறுப்புக் கற்களால் அலங்கறிக்கப்பட்டுள்ளது.

Views: - 1

0

0