வரலாற்றில் முதல்முறை..! தனிமையைப் போக்க தனி அமைச்சரை நியமித்தது ஜப்பான்..!
23 February 2021, 6:28 pm2020’ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் வெடித்ததிலிருந்து, வணிகங்களுக்கு மட்டுமல்லாது, தனிமனித இயல்பு வாழ்க்கையிலும் பல சிக்கல்கள் உருவாகியுள்ளன. தொற்று பயத்துடன் வீட்டுக்குள் தங்கியிருப்பது பலரின் வாழ்க்கையை பாதித்துள்ளது. இதனால் கடந்த காலங்களில் அதிக கவனம் கொள்ளப்படாத மனச்சோர்வு மற்றும் மன ஆரோக்கியம் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக மாறியது.
ஜப்பானிய பெண்கள், ஒரு வருடத்திற்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அதிக மன அழுத்தத்துடன் போராடி வருகின்றனர் என ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அக்டோபரில் மட்டும் ஜப்பானில் 880 பெண் தற்கொலை செய்துள்ளார்கள் எனும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முந்தைய ஆண்டை விட இது 70 சதவீதம் அதிகரிப்பு என்பது குறிப்ப்பிடத்தக்கது. இதனால் தனது மக்களின் மோசமான மன ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு, ஜப்பான் அரசு தனிமைக்கென்றே தனியாக ஒரு அமைச்சரை நியமித்துள்ளது.
ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா ஏற்கனவே நாட்டின் பிறப்பு விகிதத்தை மேம்படுத்த முயற்சிக்கும் அமைச்சரவை உறுப்பினரான டெட்சுஷி சாகாமோட்டோவை இந்த பதவிக்கு நியமித்துள்ளார். தனிமையைக் கையாள்வதற்கான அரசாங்க கொள்கைகளையும் அவர் இப்போது மேற்பார்வையிடுவார்.
“பெண்கள் குறிப்பாக அதிக அளவில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாக உள்ள நிலையில், தற்கொலை விகிதங்களை அதிகரிப்பதை எதிர்கொள்கிறார்கள். நீங்கள் இந்த பிரச்சினையை ஆராய்ந்து ஒரு விரிவான மூலோபாயத்தை முன்வைக்க விரும்புகிறேன்” என்று பிரதமர் சுகா தனது புதிய தனிமை அமைச்சரிடம் கூறினார்.
தனிமையையும் சமூக தனிமைப்படுத்தலையும் தடுக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் மக்களுக்கிடையிலான உறவுகளைப் பாதுகாப்பதற்கும் நம்பிக்கை இருப்பதாக சாகமோட்டோ கூறினார்.
உளவியல் நிபுணர் மிச்சிகோ யுடா கூறுகையில், பிரச்சினையின் ஒரு பகுதியாக நாட்டில் நிலையான வேலைவாய்ப்பு இல்லாத ஒற்றைப் பெண்கள் அதிகரித்து வருகின்றனர். “நிறைய பெண்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்டுவதற்கு அவர்களுக்கு நிரந்தர வேலைகள் இல்லை. எனவே ஏதாவது நடந்தால், அவர்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.” என்று அவர் கூறினார்.
0
0