தன் மனைவியுடன் செக்ஸ் வைத்து கொண்ட ‘லெஸ்பியன்’ பெண்! கோர்ட் என்ன தீர்ப்பு வழங்கியது பாருங்க?

Author: Poorni
26 March 2021, 9:15 am
Quick Share

ஜப்பானை சேர்ந்த ஆண் ஒருவர், தன் மனைவி வேறு ஒரு பெண்ணிடம் செக்ஸ் வைத்து கொண்டார் என வழக்கு பதிய, அந்த கணவருக்கு, செக்ஸ் வைத்து கொண்ட பெண் ரூ.70 ஆயிரம் இழப்பீடு தர வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.

ஜப்பானில் உள்ள டோக்கியோ நீதிமன்றத்தில், ஆண் ஒருவர் வித்தியாசமான வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். 39 வயது நிரம்பிய அந்த ஆணின், 37 வயது மனைவி, வேறு ஒரு பெண்ணிடம் உடலுறவு வைத்து கொண்டதாக, அந்த பெண் மீது குற்றம் சாட்டி வழக்கு பதிவு செய்தார். இரு பெண்களும் ஆன்லைனில் சந்தித்து பின் இத்தகைய செயலில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

விசாரணையின் போது, அவரது மனைவியுடன் லெஸ்பியன் உறவில் ஈடுபட்ட பெண் வாதிடுகையில், ‘அந்த பெண்ணிடம் நான் உடலுறவு வைத்து கொண்டதால், அவர்களது திருமண வாழ்க்கையை அது பாதிக்கவில்லை. அது துரோகத்தில் பொருந்தாது’ என வாதிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த உறவு துரோகத்தில் சேராது என தீர்ப்பளித்து, குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு அபராதம் மட்டும் அளித்தனர்.

அந்த பெண், வழக்கு தொடர்ந்த ஆணுக்கு 1,100,00 யென் (இந்திய மதிப்பில் 70 ஆயிரம் ரூபாய்) அபாரதம் கட்ட வேண்டும் என தீர்ப்பளித்தனர். இந்த சுவாரஸ்யமான வழக்கின் தீர்ப்பு கடந்த பிப்ரவதி மாதம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

Views: - 179

1

0