நியூட்ரினோக்களைக் கண்டறிந்த நோபல் பரிசு பெற்ற ஜப்பான் விஞ்ஞானி மரணம்..!

13 November 2020, 8:32 pm
Japan_Nobel_laureate_Masatoshi_Koshiba_UpdateNews360
Quick Share

நியூட்ரினோக்கள் எனப்படும் அடிப்படை துகள்கள் இருப்பதை உறுதிப்படுத்தி, இயற்பியலுக்கான 2002’ஆம் ஆண்டு நோபல் பரிசின் இணை வெற்றியாளரான ஜப்பானிய வானியற்பியல் விஞ்ஞானி மசடோஷி கோஷிபா காலமானார். அவருக்கு வயது 94.

டோக்கியோ பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியரான கோஷிபா நேற்று டோக்கியோ மருத்துவமனையில் காலமானார் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. எனினும் அவரது மரணத்திற்கான காரணத்தை பல்கலைக்கழகம் வெளியிடவில்லை.

கோஷிபா சூரியனில் இருந்து வெளியாகும் நியூட்ரினோக்கள் மற்றும் துகள்கள் ஆகியவற்றைக் கண்டறிய மாபெரும் நிலத்தடி அறைகளை நிர்மாணித்தார்.

கோஷிபா மத்திய ஜப்பானில் உள்ள மலைகளில் கட்டப்பட்ட ஒரு பெரிய நியூட்ரினோ டிடெக்டர் சென்டரில்  பணிபுரிந்தார். அப்போது தொலைதூர சூப்பர்நோவா வெடிப்பிலிருந்து வரும் நியூட்ரினோக்களை கண்டுபிடித்தார்.

கோஷிபாவின் பங்களிப்பு அடுத்தடுத்த கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது. நியூட்ரினோக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட சூப்பர் காமியோகண்டே ஆராய்ச்சிக்காக அவரது மாணவர் தகாக்கி கஜிதா 2015’இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார்.

கோஷிபா இளைஞர்களுக்கான அறிவியல் கல்வியில் தீவிரமாக இருந்தார். மேலும் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கற்றல் அனுபவங்களை வழங்க தனது நோபல் பரிசு விருதைப் பயன்படுத்தி ஒரு அடிப்படை அறிவியல் அடித்தளத்தை நிறுவினார்.

மத்திய ஜப்பானில் டொயோஹாஷியைப் பூர்வீகமாகக் கொண்ட கோஷிபா 1951’இல் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார் மற்றும் 1958’இல் ஜப்பானுக்குத் திரும்புவதற்கு முன்பு அமெரிக்காவில் மேற்படிப்பை படித்தார்.

அவரது மரணம் வான் இயற்பியல் பிரிவுக்கு பேழப்பு என அறிவியலாளர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Views: - 31

0

0