3.50 லட்சம் அடி உயரம்… 11 நிமிடங்கள்… விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த ஜெஃப் பெசோஸ் குழு!!

20 July 2021, 8:12 pm
Quick Share

அமேசான் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ஜெஃப் பெசோஸ் வெற்றிகரமாக விண்வெளிப் பயணத்தை நிறைவு செய்தார்.

நிலவில் மனிதன் சென்று வந்ததன் 52வது ஆண்டை கொண்டாடும் விதமாக, இன்றைய தினத்தில் மனிதர்கள் விண்ணுக்கு சென்று வரும் திட்டத்தை புளு ஆரிஜின் நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

அதன்படி, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை நியூ ஷெப்பர்ட் என்னும் ராக்கெட் மூலம் விண்வெளிப் பயணம் தொடங்கியது. இதில், அமேசான் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரது சகோதரர் மார்க்பெசோஸ் மற்றும் 82 வயது மூதாட்டி என 4 பேர் விண்வெளிக்கு வெற்றிகரமாக சென்று விட்டு திரும்பினர்.

சுமார் 3.50 லட்சம் அடி உயரம் வரையிலான இவர்களின் பயணம் சுமார் 11 நிமிடங்கள் வரை நீடித்தது. விண்ணில் இருந்து பாராஷுட் மூலமாக நால்வரும் பூமிக்கு திரும்பினர்.

Views: - 162

0

0