‘தனது 5 வயது கனவு நிறைவேறப்போகிறது’: விண்வெளிக்கு பயணமாகிறார் ஜெப் பெசோஸ்..!!

8 June 2021, 8:55 am
Quick Share

வாஷிங்டன்: தனது புளு ஆர்ஜின் நிறுவன ராக்கெட் மூலம் ஜூலை 20ம் தேதி விண்வெளிக்கு பறக்கிறார் அமேசான் நிறுவன சி.இ.ஓ., ஜெப் பெசோஸ்.

அமெரிக்காவை சேர்ந்தவர் ஜெப் பெசோஸ் 55. 1994ல் அமேசான் ‘ஆன்லைன்’ வர்த்தக நிறுவனத்தை துவக்கி வெற்றிகரமாக நடத்தி , உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். சிறுவயதில் விண்வெளி பயணம் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 2000 ஆம் ஆண்டு ‘ப்ளு ஆர்ஜின்’ என விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தையும் துவக்கினார்.

2015ம் ஆண்டு ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் நியூ ஷெப்பர்ட் என்ற ராக்கெட்டை வெற்றிக்கரமாக விண்வெளிக்கு செலுத்தியது. வரும் ஜூலை முதல் வாரம் அமேசான் சி.இ.ஓ., பொறுப்பிலிருந்து ஜெப் பெசோஸ் விலகப்போவதாக கடந்த பிப்ரவரி மாதம் செய்திகள் வெளியான நிலையில் வரும் ஜூலை 20ம் தேதி புளூ ஆர்ஜின் நிறுவன ராக்கெட் மூலம், விண்வெளிக்கு பறக்க திட்டமிட்டுள்ளதாக ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தனது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊரடங்களில் ஜெப் பெசோஸ் கூறியுள்ளதாவது, ப்ளு ஆர்ஜின் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு சோதனைக்காக மனிதர்களை ராக்கெட்டில் அனுப்ப திட்டமிட்டது. இதையடுத்து வரும் ஜூலை 20ம் தேதி எனது சகோதரர் மார்க்குடன் விண்வெளிக்கு பறக்க உள்ளேன்.

எங்களுடன் மேலும் ஒருவர்பயணிக்கலாம், அந்த இருகைக்கான ஏலம் துவங்கியுள்ளது. இதன் மூலம் விண்வெளிக்கு பயணிக்க வேண்டும் என்ற எனது சிறுவயது கனவு நிறைவேறபோகிறது என்று தெரிவித்துள்ளார்.

Views: - 177

0

0