இஸ்ரேலுக்கு தன்னை தற்காத்துக் கொள்ள முழு உரிமை உண்டு..! இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் அறிக்கை..!

13 May 2021, 3:41 pm
israel_palestine_updatenews360
Quick Share

காசாவிலிருந்து ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனிய குழுக்கள் வீசிய ராக்கெட்டுகளின் மத்தியில் இஸ்ரேலுக்கு தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடென் கூறியுள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவுடன் பேசிய ஜோ பிடென், பல நாட்கள் நீடித்த வன்முறையில் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

“எனது எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் என்னவென்றால், இது பிரச்சினை விரைவில் முடிக்கப்படும் என்பது தான். அதே தங்கள் எல்லைக்குள் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் பறக்கும்போது இஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு.” என்று ஜோ பிடென் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று காசாவில் இஸ்ரேல் தனது விமானத் தாக்குதலை அதிகரித்தது. காசா பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களால் மூத்த ஹமாஸ் இராணுவ பிரமுகர்கள் வீழ்த்தப்பட்டனர்.

இதற்கிடையில், இஸ்ரேல்-பாலஸ்தீனிய மோதலைத் தணிக்க சர்வதேச மத்தியஸ்தர்களை விரைவாக சந்திக்க ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றை உள்ளடக்கிய மத்தியஸ்தர்களின் குவார்டெட் என அழைக்கப்படும் அவசரக் கூட்டத்தை அழைக்க வேண்டியது அவசியம் என்று ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் கூறினார். ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸுடன் நேற்று பேசிய பின்னர் லாவ்ரோவ் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

குவார்டெட்டின் விரைவான மந்திரி கூட்டம் இப்போது மிகவும் கடுமையான பணி என்று லாவ்ரோவ் கூறினார். எனினும் அத்தகைய கூட்டத்தை கூட்டுவதற்கு குட்ரெஸ் உதவ முடியும் என்று அவர் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

Views: - 234

0

0