அமெரிக்காவில் முதலில் யாருக்கு தடுப்பூசி வழங்கப்படும்..? ஜோ பிடென் ஆலோசகர் செலின் கவுண்டர் தகவல்..!

29 November 2020, 1:52 pm
Celine_Gounder_UpdateNews360
Quick Share

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடென், நாட்டில் கொரோனா தடுப்பூசி யாருக்கு முதலில் கிடைக்கும் என்பதை சுகாதார நிபுணர்கள் தீர்மானிக்க அனுமதிப்பார் என்று அவரது கொரோனா வைரஸ் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான இந்திய வம்சாவளி டாக்டர் செலின் கவுண்டர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கான ஆபத்து வெவ்வேறு குழுக்களிடையே வேறுபடக்கூடும் என்பதால், ஒரு தடுப்பூசிக்கான முன்னுரிமை முறையாக திட்டமிடப்பட வேண்டும் என்றும் மேலும் பிடென் அந்த முடிவுகளை சுகாதார நிபுணர்களிடம் விட்டுவிடுவார் என்று இந்திய-அமெரிக்க தொற்று நோய் மருத்துவர் செலின் கவுண்டர் கூறினார்.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் ஒரு தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்ட உடனேயே ஒரு குறிப்பிட்ட அளவு கொரோனா வைரஸ் தடுப்பூசி அளவுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“சுகாதாரப் பணியாளர்களைத் தவிர, அதைப் பெறுவதற்கு முதலிடம் வகிக்கும் மற்றவர்கள், வயதான நீண்டகால மருத்துவ நிலைமைகளைக் கொண்ட நபர்களாகவும், இந்த தொற்றுநோயால் அளவுக்கதிகமாக பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களாகவும் இருப்பார்கள்” என்று செலின் கவுண்டர் கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து நாட்டின் இறப்பு எண்ணிக்கை தற்போது வரை 2,64,000’க்கும் அதிகமாக உள்ளது. இந்த வாரம் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) வெளியிட்டுள்ள ஒரு கணிப்பின்படி, அடுத்த மூன்று வாரங்களில் கிட்டத்தட்ட 60,000 பேர் தங்கள் உயிர்களை இழக்க நேரிடும்.

Views: - 0

0

0