‘அனல்’ பறக்கும் தேர்தல் பிரச்சாரம்…மழையில் நடனமாடி ஆதரவு திரட்டிய கமலா ஹாரீஸ்…!!(வீடியோ)

21 October 2020, 11:31 am
kamala harris 1 - updatenews360
Quick Share

அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு இடையே துணைஅதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரீஸ் கொட்டும் மழையில் ஒய்யாரமாக நடனமாடி ஆதரவாளர்களை கவர்ந்துள்ளார்.

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிபர் தேர்தலுடன் துணை அதிபர் பதவிக்கான தேர்தலும் நடைபெறவிருக்கிறது.

kamala_harris_UpdateNews360

துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கமலா ஹாரீஸ் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், புளோரிடா மாகாணம் ஜாக்சன்வில்லே நகரில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் கமலா ஹாரீஸ் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது திடீரென கனமழை பெய்யத் துவங்கியது.

கொட்டும் மழையிலும் அசராத கமலா ஹாரீஸ் குடையுடன் பிரச்சாரத்தை தொடர்ந்தார். மேலும் தனது ஆதரவாளர்களை கவரும் வகையிலும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் குடையை பிடித்துக்கொண்டே நடனமாடினார். கமலா ஹாரீசின் நடனத்தை வீடியோ எடுத்த ஆதரவாளர்கள் ‘லேடி பாஸ்’ என்று குறிப்பிட்டு அதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். தற்போது கமலா ஹாரீஸின் நடன வீடியோ இணையத்தில் வேகமாக உலா வருகிறது.

Views: - 18

0

0