பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை..! கராச்சியில் 19 பேர் பலி..!

28 August 2020, 11:34 am
karachi_rainfall_updatenews360
Quick Share

கராச்சியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 19 பேர் கொல்லப்பட்டனர். 1967 முதல் பாகிஸ்தான் நகரமான கராச்சியில் தற்போது தான் ஒரு நாளில் அதிக மழை பெய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று மட்டும் வெறும் 12 மணி நேரத்தில் கராச்சியில் 223.5 மிமீ மழை பெய்ததாக வானிலை துறை தெரிவித்துள்ளது. இது நகரத்தில் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக மழை பதிவாகியுள்ளது.

1967 ஜூலை 26 அன்று மஸ்ரூர் தளத்தில் 211.3 மி.மீ. அளவிலான மழையை விஞ்சி புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் தற்போது நெருக்கடி போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளதால் சிந்து மாகாண முதல்வர் முராத் அலி ஷா பொது விடுமுறை அறிவித்துள்ளார்.

படகுகள் மற்றும் பிற உயிர்காக்கும் கருவிகளுடன் பாகிஸ்தான் கடற்படை, அரசு நிர்வாகத்திற்கு உதவுவதற்காக மீட்புக் குழுக்களை அனுப்பியுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது, வெள்ளம் சூழ்ந்த மாலீர் மற்றும் கோரங்கி கிராசிங்கில் சிக்கிய 55 பேரை கடற்படை குழுக்கள் மீட்டுள்ளது. சம்மு கோத்தில் சிக்கித் தவித்த 20 குடும்பங்களும் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர்.

இதற்கிடையில், நகரத்தின் பல முக்கிய சாலைகள் கடுமையான போக்குவரத்து நெரிசல்களைக் கண்டன. கராச்சியின் பல பகுதிகளிலும் மின் தடை ஏற்பட்டது. நகரின் சில பகுதிகள் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாமல் உள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது என்று கராச்சி எலக்ட்ரிக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கராச்சியில் முன்னோடியில்லாத வகையில் பருவமழை ஏற்பட்டதற்கு பதிலளித்த பிரதமர் இம்ரான் கான், தனது அரசாங்கம் நெருக்கடி காலத்தில் நகர மக்களை காய் விடாது என்று கூறியுள்ளார்.

தொடர்ச்சியான ட்வீட்களில், மழையால் ஏற்பட்ட பேரழிவை மத்திய அரசு முழுமையாக அறிந்திருக்கிறது என்று கூறிய பிரதமர் மேலும், “நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை நான் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறேன். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.

சிந்து ஆளுநர் இம்ரான் இஸ்மாயில் நிலைமையை மிகவும் அசாதாரணமானது என்று குறிப்பிட்டார். மேலும் அவசரகால மீட்பு நடவடிக்கை தேவை என்றும் கூறினார். எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவால் பூட்டோ-சர்தாரி, ஒரு ட்வீட்டில், இந்த ஆண்டு, சிந்து 90 ஆண்டுகளில் மிக மோசமான பருவமழைகளை கண்டதாகக் கூறினார்.

Views: - 37

0

0