மழலை பேச்சால் சொக்கிப் போய் கிடக்கும் இணையதள உலகம் – வைரல் வீடியோ

17 April 2021, 1:43 pm
Quick Share

அப்பா கொஞ்சம் பொறுங்கள், நான் உங்களுக்கு காபி போட்டு தருகிறேன் என்று கொஞ்சி பேசும் குழந்தையின் வீடியோ, இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இன்றைய இணையதள உலகில், வீடியோக்கள் என்பது கொட்டிக் கிடக்கின்றன.இதில் சில வீடியோக்களை பார்த்தால், ஏன் தான் இதை பார்த்தொமோ என்று நினைக்க வைத்து விடும். இன்னும் சில வீடியோக்களோ, நம்மை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு செல்லும் அளவுக்கு இருக்கும். சில வீடியோக்களை, நாம் எத்தனை முறை பார்த்த போதிலும், மீண்டும் மீண்டும் அதை பார்க்கத் தூண்டுவனவாக இருக்கும்.

அந்தவகையில், ஒரு சுட்டிக் குழந்தை, தன் தந்தையிடம், அப்பா கொஞ்சும் பொறுங்கள். இந்த குக்கீஸை சாப்பிட்டு முடித்துவிட்டு, உங்களுக்கு காபி போட்டுத் தருகிறேன் என்று தனது அழகான கொஞ்சும் மழலை மொழியில் சொல்கிறது.

அதற்கு அம்மா, இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டதற்கு, 2 நிமிடங்கள், இன்னும் 2 நிமிடங்கள் தான் ஓகேவா என்று அழகுற பதில் அளிக்கும் வீடியோ, சமூகவலைதளங்களில் நெட்டிசன்களால், வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

https://www.facebook.com/watch/?v=3605537076221662&t=0

முதலில், இந்த வீடியோ, டிக்டாக் எனும் செயலியின் மூலமே, பிரபலம் ஆனது. இதன் பிரபலத்தை கண்ட ஆன்லைன் புட் அண்ட் கல்சர் நிறுவனம், தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் இந்த வீடியோவை பகிர்ந்தது. இந்த நிறுவனம், பெரிய அளவிலான வாடிக்கையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ள நிலையில், இந்த வீடியோ, மேலும் பல்லாயிரக் கணக்கானோர்களை சென்று சேரும் வாய்ப்பு ஏற்பட்டது. ஏற்கனவே வைரல் ஆன வீடியோ, இப்போது பெரிய நிறுவனத்தின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களையும் அலங்கரித்துள்ள நிலையில், அதன் பிரபலம் மேலும் பன்மடங்கு அதிகரித்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

இந்த வீடியோவிற்கு, இதுவரை 57 ஆயிரம் பேர் ரியாக்சன்களை காட்டி உள்ளனர். பல்லாயிரக் கணக்கான கமெண்ட்கள் உள்ள நிலையில், மேலும் அது வந்தவண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 36

0

0