ஸ்பெயினில் வெடித்துச் சிதறும் ‘லா பால்மா’ எரிமலை: ஆற்றுவெள்ளம் போல பொங்கி ஓடும் லாவா…!!

Author: Aarthi Sivakumar
12 October 2021, 5:22 pm
Quick Share

ஸ்பெயின் லா பால்மாவில் உள்ள Cumbre Vieja என்ற எரிமலை வெடித்து அதன் தீக்குழம்பு ஆறு போல் ஓடத் தொடங்கியுள்ளது.

ஸ்பெயின் லா பால்மாவில் உள்ள இந்த எரிமலை ஒரு மாதத்திற்கு முன்பு வெடித்தது. அட்லாண்டிக் பெருங்கடலுக்கு 300 மீட்டர் அப்பால் தீக்குழம்பு வெளியேறிவருவதால் அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்படுகிறார்கள்.

இந்த எரிமலை கிட்டத்தட்ட 1000 மீட்டர் அகலமும் 25 மீட்டர் தடிமனும் சுமார் 6,300 மீட்டர் நீளம் கொண்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். லா பால்மா எரிமலை தீக்குழம்பினால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

அனைத்து மக்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர். 1000க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் எரிமலைகளால் கடுமையாக சேதமடைந்துள்ளன. விவசாய விளைநிலங்கள் ஏக்கர் கணக்கில் முற்றிலும் அழிந்துள்ளது. எரிமலையிலிருந்து வரும் தீக்குழம்பினால் நகரமே கரும்புகை சூழ்ந்தும், காற்றும் மாசடைந்துள்ளது .

Views: - 195

0

0