‘இந்தியாவுக்கு நாடு கடத்தினால் நீரவ் மோடி தற்கொலை செய்து கொள்வார்’: லண்டன் நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர்..!!

22 July 2021, 12:56 pm
Quick Share

லண்டன்: நீரவ் மோடியை நாடு கடத்தினால் அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்புள்ளதாக லண்டன் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடான சான்றுகளை அளித்து அதன் மூலம் சுமார் 14,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக தெரியவந்தது. இதனையடுத்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இவர் மீது தனித்தனியாக வழக்குகளை பதிவு செய்தன. இந்தியாவில் இருந்தால் கைது செய்யப்படுவோம் என அறிந்த நீரவ் மோடி கடந்த 2018ம் ஆண்டு வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றார்.

Will commit suicide if extradited to India, says Nirav Modi after UK court  rejects bail plea

மேற்கிந்திய தீவு நாடொன்றில் அவர் தஞ்சமடைந்தார். அங்கு அவருக்கு இருந்த அழுத்தம் காரணமாக பிரிட்டனில் வந்து தலைமறைவானார். இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று இங்கிலாந்து அரசு அவரை 2019 மார்ச் மாதம் லண்டன் மெட்ரோ ஸ்டேஷனில் வைத்து கைது செய்தது. லண்டனில் உள்ள வான்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இங்கிலாந்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நீரவ் மோடியை நாடு கடத்துவதற்காக சட்ட ரீதியிலான முன்னெடுப்புகளை மத்திய அரசு மேற்கொண்டது. இது தொடர்பான வழக்கு வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடந்தது. நீரவ் மோடியை நாடு கடந்த நீதிபதி உத்தரவிட்டார். பிரிட்டனின் நாடு கடத்தல் விதிகளின் படி தனது உத்தரவை பிரிட்டன் உள்துறை அமைச்சகத்துக்கு நீதிபதி அனுப்பினார். நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடந்த பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி லண்டன் உயர்நீதிமன்றத்தில் நீரவ் மோடி தரப்பு மனு தாக்கல் செய்தது. அம்மனு, நீதிபதி மார்ட்டின் சாம்பர்லைன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீரவ் மோடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எட்வர்டு பிட்ஜெரால்டு கூறியதாவது,

நீரவ் மோடி நீண்ட நாள்களாக கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார். அவருக்கு தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணம் அடிக்கடி வந்து போவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். நீரவ் மோடிக்கு 8 வயதாக இருக்கும்போது அவரது அம்மா பால்கனியில் இருந்து குதித்துள்ளார் நீரவ் மோடியை நாடு கடத்தும் விவகாரத்தில் பல முக்கிய விவகாரங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.

மும்பையில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. மேலும், ஆர்தர் ரோடு சிறை இடப்பற்றாக்குறையுடன் உள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. அங்குள்ள சிறையில் அவரை அடைத்தால் அவர் தற்கொலை செய்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. இந்த காரணங்களால் அவரை நாடு கடத்தக்கூடாது என வாதாடினார். மேலும் நீரவ் மோடி உடல்நிலை தொடர்பான ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

Views: - 166

0

0