துருக்கி மற்றும் கிரீசை தாக்கியது சுனாமி..! சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலத்த சேதம்..! (வீடியோ)

30 October 2020, 8:36 pm
turkey_updatenews360
Quick Share

கிரேக்க தீவான சமோஸ் மற்றும் துருக்கியின் ஏஜியன் கடற்கரையை 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று ஏற்பட்ட பின்னர், துருக்கியின் இசிமிரில் பேரழிவு போன்ற சுனாமி ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

துருக்கிய கடற்கரைக்கும் கிரேக்க தீவான சமோஸுக்கும் இடையே இன்று ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் மேற்கு இசிமிர் மாகாணத்தில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

முதற்கட்ட தகவலில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர். அதே நேரத்தில் கட்டிடங்கள் மற்றும் சாலை நெட்வொர்க்கில் சில சேதங்கள் மற்றும் சமோஸில் லேசான சேதங்களும் ஏற்பட்டன

துருக்கியின் சுகாதார அமைச்சர் பஹ்ரெடின் கோகா இசிமிரில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 120 பேர் காயமடைந்தனர் என்று ட்வீட் செய்துள்ளார். 38 ஆம்புலன்ஸ்கள், இரண்டு ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்கள் மற்றும் 35 மருத்துவ மீட்புக் குழுக்கள் இசிமிரில் பணியாற்றி வருவதாக அவர் கூறினார்.

கிரேக்க தீவான சமோஸின் வடகிழக்கில் 13 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 எறு பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வு மையம் ரிக்டர் அளவுகோலில் 7.0’ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

பூகம்பத்தால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகள் அதிக அளவில் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

1 thought on “துருக்கி மற்றும் கிரீசை தாக்கியது சுனாமி..! சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலத்த சேதம்..! (வீடியோ)

Comments are closed.