இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் மகிந்த ராஜபக்சே..! அதிகாரத்தில் குடும்பத்தின் பிடியை உறுதிப்படுத்தினார்..!

9 August 2020, 5:03 pm
Mahinda_Rajapaksa_UpdateNews360
Quick Share

பல நூற்றாண்டுகள் பழமையான புத்த கோவிலில்இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராக பதவியேற்றார். அவரது கட்சி பாராளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

74 வயதான இலங்கை மக்கள் கட்சி (எஸ்.எல்.பி.பி) தலைவர் தனது தம்பியும் ஜனாதிபதியுமான கோத்தபய ராஜபக்சே அவர்களால் வட கொழும்பின் புறநகர்ப் பகுதியான கெலானியாவில் உள்ள ராஜமஹா விஹாரத்தில் உள்ளூர் நேரப்படி காலை 9:28 மணிக்கு பதவியேற்றார்.

பிரதமராக மகிந்த ராஜபக்சேவின் நான்காவது இன்னிங்ஸ் இதுவாகும். இலங்கையின் 13 வது பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றதை கொண்டாட எஸ்.எல்.பி.பி ஆதரவாளர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.

களனியா கோயில் என்றும் அழைக்கப்படும் ராஜமஹா விகார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது குறிப்பிடத்தக்கது.

மகிந்த ராஜபக்சே இந்த ஆண்டு ஜூலை மாதம் 50 ஆண்டு நாடாளுமன்ற அரசியலை நிறைவு செய்தார். 1970’இல் 24 வயதில் அவர் முதன் முதலாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் இரண்டு முறை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார், இதற்கு முன் மூன்று முறை பிரதமராகவும் இருந்துள்ளார்.

ஏப்ரல் 2004 முதல் நவம்பர் 2005 வரை அவர் பிரதமராக இருந்தார். 2018 இல் 52 நாட்கள் பிரதமராகவும், 2019 நவம்பர் முதல் 2020 ஆகஸ்ட் 5 வரை பிரதமராகவும் இருந்தார்.

மகிந்த ராஜபக்சே தலைமையிலான எஸ்.எல்.பி.பி, ஆகஸ்ட் 5 பொதுத் தேர்தலில் ஒரு மகத்தான வெற்றியைப் பதிவுசெய்து, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று ராஜபக்சே குடும்பத்தின் பிடியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

Views: - 28

0

0