மலேசியாவில் அவசர நிலை பிரகடனம் அமல்..! பாராளுமன்றம் செயலிழப்பு..! தேர்தல் ரத்து..! மன்னர் அதிரடி உத்தரவு..!

12 January 2021, 7:37 pm
Malaysia_Corona_UpdateNews360
Quick Share

மலேசியாவின் மன்னர் கொரோனா தொற்றை காரணம் காட்டி இன்று நாடு தழுவிய அவசர நிலை பிரகடனத்தை அறிவித்ததோடு, பாராளுமன்றத்தை செயலிழக்கச் செய்து உத்தரவிட்டுள்ளார்.

நாடு கொரோனாவை எதிர்த்து கடுமையாக போராடி வரும் நிலையில், தற்போதைய நிலையற்ற ஆட்சியாளர்கள் அதிகாரத்தை தக்க வைக்க இந்த உத்தரவை வெளியிட்டுள்ளதாக, மலேசிய எதிர்க்கட்சியினர் அறிவித்துள்ளனர்.

மலேசியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த பெரும்பாலான வணிகங்களை மூடுவது உட்பட, புதிய கட்டுப்பாடுகளை பிரதமர் அறிமுகப்படுத்திய ஒரு நாள் கழித்து இந்த அறிவிப்பு வந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் சுகாதார முறை முற்றிலும் செயலிழந்த நிலையில் இருப்பதாக எச்சரித்தது.

மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா திங்கள்கிழமை நேற்றைய கூட்டத்தில் பிரதமர் முஹைதீன் யாசின் கோரிக்கையைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1 வரை அவசரநிலை அறிவிக்க ஒப்புக்கொண்டதாக தேசிய அரண்மனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை பாராளுமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் போன்ற அரசியல் நடவடிக்கைகளை இடைநிறுத்த அனுமதிக்கிறது. மேலும் முஹைதீனின் மிகவும் நிலையற்ற, 10 மாத பழமையான அரசாங்கம் பல சவால்களை எதிர்கொள்ளும் நிலையில் இது, பிரதமர் தனது அதிகாரத்தை தக்கவைப்பதற்காக மேற்கொண்டுள்ள செயல் என பரவலாக விமர்சனம் எழுந்துள்ளன.

அவரது ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, ஆதரவைத் திரும்பப் பெறுவதாக அச்சுறுத்துகின்றனர். இது அரசாங்கத்தின் சரிவுக்கு வழிவகுக்கும் மற்றும் அரசியல் நிலைமையை மேலும் மோசமாக்கும்.

மலேசியா கடந்த ஆண்டின் பெரும்பகுதியை கடுமையான ஊரடங்குடன் வைத்திருந்தது. ஆனால், தடைகள் தளர்த்தப்பட்டதும், பாதிப்புகள் அதிகரித்து வருவதுடன், சமீபத்திய நாட்களில் கொரோனா எண்ணிக்கை விஸ்வரூபமெடுத்து வருகிறது.

இதற்கிடையே நோய்த்தொற்றின் வீதம் குறைந்துவிட்டால் அவசரகாலத்தை முன்னதாகவே நீக்க முடியும் என்று அரண்மனை அறிக்கை மேலும் கூறியுள்ளது.

Views: - 7

0

0