வதவதவென குட்டி போட்ட ஆண் கடல் குதிரை! வைரல் வீடியோ

17 January 2021, 8:49 am
Quick Share

ஆஸ்திரேலியாவில் ஆண் கடல் குதிரை ஒன்று டஜன் கணக்கில் குட்டி போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. எவ்ளோ குட்டி போடுகிறது என நீங்களே வீடியோவில் பாருங்கள்..

உலகிலேயே கடல் குதிரை மட்டும் தான் ஆண் வர்க்கத்தில் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்ற ஆச்சரிய தகவல் உங்களுக்கு தெரியுமா? இது குதிரை போன்ற முக அமைப்பு, குரங்கு போன்ற வால், ஆண் இனங்கள் இனப்பெருக்கம் செய்வது என பல்வேறு சிறப்புகளை உடைய அரியவகை கடல் வாழ் உயிரினம் ஆகும். பல்வேறு காரணங்களால், கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் அரிய இனமாக அறியப்படுகிறது.

பெண் கடல் குதிரைகள், தங்களின் முட்டைகளை, ஆண்களின் வால் பகுதியில் இருக்கும் இனப்பெருக்க பைகளில் விட்டுவிடும். அதனை ஆண் கடல் குதிரைகள், கங்காரு போல, நன்கு பேணி பாதுகாத்து, ஆறு வாரங்களுக்கு பின், குஞ்சுகளாக இருக்கும். 50 முதல் 100 குஞ்சுகள் வரை பொரிக்கும். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் ஆண் கடல் குதிரை ஒன்று, குட்டி போடும் அரிய வீடியோ ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சிட்னியில் உள்ள கடல் வாழ் உயிரினங்களின் அருங்காட்சியகம், அழிந்து வரும் உயிரினமாக வெள்ளை கடல் குதிரைகளை இனப்பெருக்கம் செய்ய வைக்கும் முயற்சியில் இறங்கி சாதனை படைக்க, அது தற்போது குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த வீடியோவும், கடல் குதிரைகள் பற்றிய தகவல்களையும், ஏபிசி சிட்னி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட, அது லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

Views: - 6

0

0