ஆன்லைனில் ஆப்பிள் ஆர்டர் செய்தவருக்கு இலவசமாக வந்த ஆப்பிள் ஐபோன்! கதை என்ன தெரியுமா?

17 April 2021, 9:00 am
Quick Share

பிரிட்டனில் உள்ள பிரபல விற்பனை தளமான டெஸ்கோவில் ஆப்பிள் பழங்களை ஆர்டர் செய்தவருக்கு, ஆப்பிள்களுடன் ஆப்பிள் ஐபோன் இலவசமாக டெலிவரி செய்யப்பட்டு இன்ப அதிர்ச்சி அளிக்கப்பட்டிருக்கிறது.

உங்களுக்கு பிடித்த மொபைல் போனை வாங்க பல மாதங்கள் செலவழிக்க வேண்டி வரும். ஆனால் பிரிட்டனில் ஒரு மனிதர் செய்ததோ, தனக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவது மட்டுமே. சாத்தியமற்றது போல் தெரிகிறதா? ட்விக்கன்ஹாமைச் சேர்ந்த நிக் ஜேம்ஸ் தனது மளிகைப் பையில் ஒரு புதிய ஆப்பிள் ஐபோனைப் பார்த்தபோது திகைத்துப் போனார். இங்கிலாந்தின் பன்னாட்டு மளிகைப் பொருட்கள் மற்றும் பொது வணிக சில்லறை விற்பனையாளரான டெஸ்கோவின் கிளைகளில் ஒன்றிலிருந்து சில பொருட்களை அவர் ஆர்டர் செய்திருந்தார்.

50 வயதான நிக் ஜேம்ஸ் என்ற நபருக்கு ஆப்பிள் பழங்களை டெலிவரி செய்த டெலிவரி பாய், பாக்ஸ்க்குள் உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என தெரிவித்திருக்கிறார். உள்ளே ஈஸ்டர் முட்டைகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் திறந்து பார்த்த அவருக்கு உள்ளே இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. பாக்ஸில் ஆப்பிள் ஐபோன் ஒன்று இருந்திருக்கிறது. டெஸ்கோ அவரை தேர்ந்தெடுக்கு அவருக்கு இலவசமாக ஐபோனை வழங்கி இருக்கிறது. இதேபோல், இங்கிலாந்து முழுவதிலும் சுமார் 80 விலை உயர்ந்த பொருட்களை, மளிகை பொருட்களை ஆர்டர் செய்தவர்களுக்கு இலவசமாக வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறது.

இதுகுறித்து நிக் ஜேம்ஸ் தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது, “நாங்கள், ஆன்லைன் மூலம் ஆப்பிள் பழங்கள் ஆர்டர் செய்தோம். டெலிவரியின் போது எங்களுக்கு ஒரு சிறிய ஆச்சரியம் காத்திருந்தது. டெலிவரி வந்த பார்சலில் ஆப்பிள் பழங்களுடன், ஆப்பிள் ஐபோன் ஒன்று இருந்தது, அதனை என் மகனுக்கு வழங்கி விட்டேன். டெஸ்கோவிற்கு எனது நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார். அதிர்ஷ்டம் என்றால் அது இது தான்!!

Views: - 14

0

0