குழந்தைகள் காப்பகத்தில் தீ..! மடிந்த போன பிஞ்சுகள்..!!

15 February 2020, 7:41 am
Orphanage Fire - updatenews360
Quick Share

மெக்சிகோ : காப்பகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டின் போர்ட் அவ் பிரின்ஸ் மாகாணத்தில் உள்ள ஹைடியன் நகரம் ஹென்ஸ்ஹப் என்ற பகுதியில் தாய் தந்தையர் இல்லாத குழந்தைகளின் காப்பகம் உள்ளது.

இந்த காப்பகம் இரண்டு மாடிகளை கொண்டதாகவும் சுமார் 66 குழந்தைகள் இந்த காப்பகத்தில் தங்கி வசித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று அந்த காப்பகத்தின் முதல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ காட்டுத்தீ போல மளமளவென இரண்டாவது தளத்திற்கும் பரவியது. இதனால் குழந்தைகள் வெளியேற முடியாமல் காப்பகத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கட்டிடத்திற்குள் சிக்கி இருந்த சிறுவர்களை மீட்டனர். பல குழந்தைகள் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் 15 குழந்தைகள் மூச்சு திணறல் மற்றும் உடல் கருகி பரிதாபமாக உயிபிழந்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கு காரணம் என்ன என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.