எரித்ரியாவுக்கு மனிதாபிமான உதவி..! நிவாரணப் பொருட்களுடன் சென்றடைந்தது இந்திய போர்க் கப்பல்..!

7 November 2020, 10:36 am
ins_airvat_updatenews360
Quick Share

மனிதாபிமான முறையில் பிற நாடுகளுக்கு உதவும் சாகர் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக இந்திய கடற்படைக் கப்பல், எரித்ரியா மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களோடு ஐ.என்.எஸ் ஐராவத் இன்று எரித்ரிய துறைமுகமான போர்ட் மாசாவாவை அடைந்தது.

இயற்கை பேரழிவுகள் மற்றும் கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ள நட்பு நாடுகளுக்கு இந்தியா உதவிகளை வழங்கி வருகிறது. இந்த நோக்கத்திற்காக ஐ.என்.எஸ். ஐராவத் எரித்ரியா மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்க சென்றுள்ளது.

எரித்ரியாவிற்கான இந்தியத் தூதர் சுபாஷ் சந்த் உணவுப் பொருட்களை வடக்கு கடல் பிராந்திய ஆளுநரிடம் ஒப்படைத்தார் மற்றும் எரித்ரிய கடற்படையைச் சேர்ந்த மற்ற அதிகாரிகளும் அப்போது உடன் இருந்தனர்.

மிஷன் சாகர் -2 என்பது பிரதமர் நரேந்திர மோடியின் சாகர் (பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) பற்றிய பார்வையின் அடிப்படையில் செயல்படுகிறது மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நம்பகமான நட்பு நாடாக இந்தியாவின் நிலையை மீண்டும் வலியுறுத்துகிறது. 

தனது கடல் அண்டை நாடுகளுடனான உறவுகளுக்கு இந்தியா அளித்து வரும் முக்கியத்துவத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது.

மேலும் தற்போதுள்ள பிணைப்பை மேலும் பலப்படுத்துகிறது. இந்திய கடற்படை பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சகங்கள் மற்றும் இந்திய அரசின் பிற நிறுவனங்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது.

ஐ.என்.எஸ்.ஐராவத் போர் கப்பல் உள்நாட்டில் கட்டப்பட்டது மற்றும் 19 மே 2009 அன்று முதன் முதலாக இயக்கப்பட்டது. இது போர்க்கப்பலாக வடிவமைக்கப்பட்டாலும் மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரண நடவடிக்கைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Views: - 27

0

0