என்ன பாஸ் ஷாப்பிங் வந்தீங்களா!! கடைக்குள் புகுந்து அமர்க்களம் செய்த உடும்பு

17 April 2021, 3:30 pm
Quick Share

தாய்லாந்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்குள் புகுந்த ராட்சத உடும்பு, அங்கு அட்டகாசம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தாய்லாந்தில் உள்ள ‘செவன் லெவன்’ என்ற சூப்பர் மார்க்கெட்டுக்குள் மிகப் பெரிய உடும்பு ஒன்று புகுந்தது. அங்கிருக்கும் பொருட்கள் அடுக்கப்பட்டிருக்கும் அலமாரியில் ஏறி மேலே படுத்து ஓய்வு எடுக்கிறது. உடும்பு மேலே ஏறும் போது, பொருட்கள் அனைத்தும் மேலிருந்து கீழே விழுகின்றன. இதனை கண்ட வாடிக்கையாளர்களும், கடை ஊழியர்களும் அச்சத்தில் உறைந்து போய்விட்டனர். பலரும் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

தாய்லாந்து பத்திரிக்கையாளர் ஆண்ட்ரு மாக் கிரேகர் என்பவர், உடும்பின் அட்டகாசம் செய்யும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். உடும்பை பார்த்த பலரும் அலறி துடிப்பது வீடியோவில் பதிவாகி உள்ளது. மிரட்சியுடன் நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கடைக்குள் புகுந்த ‘காட்ஸில்லா’ என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த பதிவு வைரலாகி உள்ளது.

அழுகிய விலங்குகளின் இறைச்சியை உண்ணும் மானிட்டர் லிசார்டு என்ற இந்த வகை உடும்பு இனம், தாய்லாந்தில் அதிகமாக காணப்படுகிறது. 2.6 மீட்டர் வரை வளரும் இந்த உடும்பு இனம், 91 கிலோ எடை வரை இருக்குமாம். மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் ஆற்றலும் இதற்கு உண்டு.

ஷாப்பிங் சென்ற உங்களுக்கு இதுபோன்ற அனுபவம் ஏதேனும் கிடைத்திருக்கிறதா? அட போங்க பாஸ்.. நாங்க கரப்பான் பூச்சிக்கே கதறுவோம் என்கிறீர்களா..!!

Views: - 65

0

0