ஆத்தீ… தடுப்பூசி போட்டாலும் மீண்டும் தொற்றிக்கொள்ளுமா..? புதிய வகைக் கொரோனாவால் அமெரிக்க மக்கள் பீதி..!

3 March 2021, 12:07 pm
Corona_America_UpdateNews360
Quick Share

பிரேசிலில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒரு கொரோனா வைரஸ் மாறுபாடு தற்போது அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இது அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் புதிய மாறுபாட்டின் முதல் அறியப்பட்ட பாதிப்பு இது என்று மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரேகானின் டக்ளஸ் கவுண்டியில் உள்ள மருத்துவ அதிகாரிகளால் இந்த மாதிரி ஜனவரி மாத இறுதியில் யு.எஸ். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டது. பி 1 மாறுபாட்டைக் காட்டிய முடிவுகளை திங்கள்கிழமை இரவு பெற்றதாக அவர்கள் கூறினர்.

“பி 1 மாறுபாடு அமெரிக்காவிற்கு வெளியே பிரேசிலுக்குச் செல்லும் வணிகப் பயணத்துடன் தொடர்புடையதாகத் தோன்றுகிறது” என்று டக்ளஸ் கவுண்டி கொரோனா மறுமொழி குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிரேசிலின் மனாஸில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மாறுபாடு மற்ற கொரோனா மாறுபாடுகளை விட வீரியமிக்க தொற்றுநோயாகத் தெரிகிறது. இது ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள அல்லது தடுப்பூசி போடப்பட்ட ஒருவரையும் தாக்கும் திறன் கொண்டது எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே அமெரிக்காவில் பி 1 மாறுபாட்டின் 10 கூடுதல் பாதிப்புகள் ஏற்கனவே பதிவாகியுள்ளன. புளோரிடாவில் ஐந்து, மினசோட்டாவில் இரண்டு மற்றும் ஓக்லஹோமா, அலாஸ்கா மற்றும் மேரிலாந்தில் இருந்து தலா ஒரு பாதிப்பு உள்ளது என்று அமெரிக்க தொற்று நோயியல் துறை கூறுகிறது.

இதற்கிடையே பிரேசிலிய வகை கொரோனா பாதித்த நபர் குறித்து உள்ளூர் சுகாதாரத் துறையுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும், சுயமாக தனிமைப்படுத்தப்பட்டு வருவதாகவும் ஒரேகான் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டாலும், மீண்டும் தொற்றும் இந்த புதிய வகை கொரோனா அமெரிக்க மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 16

0

0