ரிலையன்ஸ் பங்குகள் கடும் வீழ்ச்சி..! ஒரே நாளில் 52,000 கோடியை இழந்தார் முகேஷ் அம்பானி..!

3 November 2020, 5:13 pm
mukesh_ambani_updatenews360
Quick Share

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தனது நிகர மதிப்பிலிருந்து கிட்டத்தட்ட 52000 கோடியை ஒரே நாளில் இழந்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள், காலாண்டு லாபம் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ஏழு மாதங்களில் மிக மோசமான சரிவை சந்தித்துள்ளன.

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்சின் பங்கு நேற்று மும்பை பங்குச் சந்தையில் 8.6% குறைந்து, மார்ச் 23 முதல் மிகப் பெரிய சரிவை சந்தித்தது. இதனால் ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு சுமார் 71 பில்லியன் டாலர்களாக குறைத்தது.

கொரோனா வைரஸ் தொற்று எரிபொருள் தேவையை மந்தமாக்கியதால், ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு கூட்டு நிறுவனம் காலாண்டு லாபத்தில் 15 சதவீதம் சரிந்து 9,570 கோடி நிகர லாபம் பெற்றதாக அறிவித்தது. இதுவே முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு குறைவதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் பங்குகள் இந்த ஆண்டு சுமார் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் சென்செக்ஸ் 3.6 சதவிகிதம் சரிந்துள்ளது. முதலீட்டாளர்கள் முகேஷ் அம்பானியின் நிதி திரட்டும் நடவடிக்கையை உற்சாகப்படுத்தியதால், ரிலையன்ஸ் தனது டிஜிட்டல் மற்றும் சில்லறை பிரிவுகளில் பங்குகளை விற்று 25 பில்லியன் டாலருக்கும் அதிகமாக குவித்து இருந்தது. 

இதனால் ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, 2020’ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானி உலகின் ஆறாவது பணக்காரராக ஒரு கட்டத்தில் உருவெடுத்தார்.

ஆனால் தற்போது ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் பங்குகளின் வீழ்ச்சியால் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கீழ் நோக்கி இறங்கியுள்ளது.

Views: - 33

0

0