‘பிடல் காஸ்ட்ரோ’ நினைவு தினம்: கியூபாவில் பிரமாண்ட அருங்காட்சியகம் திறப்பு..!!

Author: Aarthi Sivakumar
1 December 2021, 5:45 pm
Quick Share

கியூபா: கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் நினைவு தினத்தையொட்டி பிரமாண்ட அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.

கியூபாவின் தலைவர் பிடல் காஸ்ட்ரோ 1926-ம் ஆண்டுஆகஸ்ட் 13ம் தேதி பிறந்து 2016-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி மறைந்தார். 1959ல் புரட்சி மூலம் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தினார்.

1959 முதல் 1976 வரை கியூபா பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை அதிபராகவும் பதவி வகித்தார். கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார்.

உலகிலேயே 49 ஆண்டுகள் ஒரு நாட்டை ஆட்சி செய்தவர் என்ற பெருமை பிடல் காஸ்ட்ரோவை மட்டுமே சேரும். இந்நிலையில், பிடல் காஸ்ட்ரோவின் 5ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தலைநகர் ஹவானாவில் பிரமாண்ட அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியகத்தில், சீன அதிபர் ஜின்பிங் பரிசளித்த காஸ்ட்ரோவின் மார்பளவு சிலை, அவர் அணிந்திருந்த ராணுவ சீருடை, வலம் வந்த ஜீப் என அவர் பயன்படுத்திய ஏராளமான பொருட்களும், புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், காஸ்ட்ரோவின் கம்யூனிஸ் சித்தாந்தங்களை விளக்கும் விதமாக திறந்தவெளி அரங்கம், பிரமாண்ட நூலகம் மற்றும் புத்தக கடை அமைக்கப்பட்டுள்ளது.

Views: - 524

0

0