27 மனைவிகள், 150 குழந்தைகள்.. அதுவும் ஒரே வீட்டில்! யாரு சாமி இவரு..

24 January 2021, 1:30 pm
Quick Share

27 மனைவிகள், 150 குழந்தைகளுடன் பிரமாண்ட கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வரும் இந்த 64 வயது கனடா நாட்டவரை பற்றி தான் தற்போது இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. மனைவியோடு எலியும் பூனையுமாக வாழ்பவர்கள் இதனை ஒரு உலக அதிசயமாகவே பார்க்கின்றனர்.

திருமணத்துக்கு பின், ஒருவரின் வாழ்க்கை முற்றிலும் மாறிவிடும். மனைவியின் ஆசையை நிறைவேற்றுவது, அவர்களை மகிழ்விப்பது என மொத்தமாக மாறிப்போவர் கணவன்மார்கள். பலரிடம் திருமண வாழ்வு குறித்து கேட்டால், சலிப்புடன் தான் பதில் வரும். ஆனால் இவர் கதையே வேறு.. 27 மனைவிகளுடன் மகிழ்ச்சியாக, அதுவும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார் இந்த அபூர்வ மனிதர். ஆச்சரியமாக இருக்கிறதா..

கனடாவிலுள்ள பிரிட்டிங் கொலம்பியா மாகாணத்தில், பவுண்டிஃபுல் பகுதியில் வசித்து வருபவர் வின்ஸ்டன் பிளாக்மோர் (வயது 64). இவருக்கு 27 மனைவிகள், 150 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்குறித்த எந்த தகவலும் இதுவரை வெளிவராக நிலையில், அவரது மகன் டிக்டாக்கில் வீடியோவாக தனது குடும்பம் குறித்து பதிவிட பலரின் வாயை அது பிளக்க வைத்துள்ளது.

அமெரிக்காவில் தற்போது வசித்து வரும் பிளாக்மோரின் மகன், மெர்லின் (19 வயது), டிக்டாக்கில் தனது குடும்பத்தினர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களுடன், போட்டோக்களை இணைத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், நாங்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசிக்கிறோம். தன் அம்மாக்களை ‘மம்’ எனவும், அப்பாவின் பிற மனைவிகளை ‘மதர்’ எனவும் நாங்கள் அழைப்போம் என பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர், ‘அப்பா திருமணம் செய்த 27 பெண்களில், அக்கா – தங்கைகள் ஜோடி மட்டும் 4. ஒரே தாய் வயிற்றில் பிறந்த 3 சகோதரிகளையும் அவர் திருமணம் செய்திருக்கிறார். பிற சகோதர, சகோதரிகளை போல நாங்கள் சண்டையிட்டுக்கொள்வதில்லை. நாங்கள் பாசமாக இருக்கிறோம். அப்பாவுக்கு ஒரே ஆண்டில் 12 குழந்தைகள் பிறந்திருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் ‘எம்’ என்ற ஆங்கில எழுத்தில் துவங்கும் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. நான் பிறந்த தினத்தில், என் அப்பாவுக்கு மேலும் இரு குழந்தைகள் பிறந்தது. எங்களுக்கு தேவையான காய்கறிகளுக்காக நாங்கள் விவசாயம் செய்து அறுவடை செய்து கொள்வோம்’ என கூறியுள்ளார். யாரு சாமி இவரு என கேட்க தோன்றுகிறதா…?

Views: - 0

0

0