“டொனால்டு டிரம்ப்பை தோற்கடி மகளே’..! தனது தாய் குறித்து குறித்து நினைவு கூர்ந்த கமலா ஹாரிஸ்..!

7 September 2020, 7:57 pm
Kamala_Harris_UpdateNews360
Quick Share

ஜனநாயகக் கட்சியின் இந்திய-அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ், தனது மறைந்த தாய் தனது வரலாற்று நியமனம் குறித்து மிகவும் பெருமிதம் அடைந்திருப்பார் என்றும், முன்னோக்கி சென்று டிரம்பை வெல்ல வேண்டும் என்றும் கூறியிருப்பார் எனத் தெரிவித்துள்ளார். 

55 வயதான கமலா ஹாரிஸ் கலிபோர்னியாவைச் சேர்ந்த செனட்டராக உள்ளார். அமெரிக்காவின் ஒரு பெரிய அரசியல் கட்சியால் துணை ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்ட முதல் கருப்பு, ஆப்பிரிக்க அமெரிக்கர் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 3’ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் துணை ஜனாதிபதியுமான ஜோ பிடனும் கமலா ஹாரிஸும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோருக்கு சவால் விடுகின்றனர்.

யு.சி. பெர்க்லியில் முனைவர் பட்டப்படிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னையில் பிறந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த அவரது தாயார் ஷியாமலா கோபாலனை நினைவு கூர்ந்த கமலா ஹாரிஸ் சி.என்.என் பத்திரிகையிடம், “அவர் உண்மையிலேயே மிகவும் பெருமையாக இருப்பார் என்று நான் நினைக்கிறேன். மேலும் அவர் டிரம்பை வெல்வார் என்று கூறுவார்.” எனவும் தெரிவித்தார்.

“சேவை வாழ்க்கையை வாழ அவர் எங்களை தூண்டினார். அவர் எப்போதும் துன்பங்களைப் பார்த்து நெகிழ்வார், அவர் எப்போதும் விஞ்ஞானத்தை மறுப்பதை எதிர்ப்பார். இவையனைத்தும் அவரைத் தூண்டிவிடும்.” என்று கமலா ஹாரிஸ் தனது தாயைப் பற்றி கூறினார். ஒரு மார்பக புற்றுநோய் ஆராய்ச்சியாளரான அவரின் தாய் 2009’இல் புற்றுநோயால் இறந்தார்.

கணவர், அவரது வளர்ப்பு குழந்தைகள் மற்றும் மறைந்த தாயுடனான உறவு உள்ளிட்ட அவரது குடும்பத்தைப் பற்றியும் கமலா ஹாரிஸ் அப்போது மனம் திறந்து பேசினார்.

கமலா ஹாரிஸுக்கு அவரது கணவர் டக் எம்ஹாஃப் உடன் கோல் மற்றும் எல்லா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது தந்தை டொனால்ட் ஹாரிஸ், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர்.

Views: - 8

0

0