சிறுபான்மை இனக் குழுக்களுடன் சேர்ந்து நிழல் அரசாங்கம் அமைப்பு..! மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக அரசியல்வாதிகள் புதிய முயற்சி..!

16 April 2021, 9:37 pm
Suukyi_UpdateNews360
Quick Share

மியான்மரின் ராணுவ ஆட்சிக்குழுவை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு புதிய நிழல் அரசாங்கத்தை இன்று அறிவித்துள்ளனர். பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி இன சிறுபான்மை அரசியல்வாதிகளுடன் இணைந்து அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இராணுவம் ஆங் சான் சூகியை தடுத்து வைத்து அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து நாடு கொந்தளிப்பில் உள்ளது. இது மக்களிடையே ஒரு பெரும் எழுச்சியைத் தூண்டி, இராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளது.

ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்று கோருவதைத் தவிர, எதிர்ப்பாளர்கள் பெருகிய முறையில் நாட்டின் சிறுபான்மை குழுக்களுக்கு ஆளும் பங்கைக் கோருகின்றனர். பமர் இன பெரும்பான்மையினரால் பலகாலமாக ஓரங்கட்டப்பட்டிருப்பதை உணரும் வகையில் சிறுபாண்மைக் குழுக்கள் இதை வாய்ப்பாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

பைடோங்சு ஹுலுட்டாவை (சிஆர்பிஎச்) பிரதிநிதித்துவப்படுத்தும் குழு பெரும்பாலும் சூ கியின் கட்சியைச் சேர்ந்த சட்டமியற்றுபவர்கள் குழு நிழல் பாராளுமன்றம் வழியாக மறைமுக ஆட்சி செய்ய முயற்சிக்கிறது. இன்று அதன் தலைவர்களை இந்த குழு அறிவித்தது.

“தேசிய ஒற்றுமை அரசாங்கம்” என்று அழைக்கப்படும் இந்த அரசுக்கு ஆங் சான் சூகி தலைவராக இருந்து வழிநடத்துவார்.

சி.ஆர்.பி.எச் இன் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் உரையாற்றிய ஒரு முக்கிய ஜனநாயகத் தலைவரான மின் கோ நைங், கச்சின் இனத்தைச் சேர்ந்த ஒரு துணை ஜனாதிபதியும், கரேன் இனத்தவரான ஒரு பிரதமரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

“நாங்கள் அதிக எண்ணிக்கையிலான இன சிறுபான்மை குழுக்களைக் கொண்ட ஒரு அரசாங்கத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.” என்று அவர் கூறினார். நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் பட்டியலில் சின், ஷன்னி, மோன், கரென்னி மற்றும் தாங் இனக்குழுக்களின் முக்கிய தலைவர்களும் அடங்குவர்.

2020 தேர்தலின் முடிவுகள், நாடு தழுவிய ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு இயக்கத்தின் உள்ளீடு மற்றும் இன சிறுபான்மை குழுக்கள், நாட்டின் எல்லைப் பகுதிகளில் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் உட்பட பலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்று மின் கோ நைங் கூறினார்.

இதற்கிடையே சிஆர்பிஹெச் உடன் பணிபுரியும் எவரும் உயர் தேசத்துரோகம் செய்வதாக இராணுவ ஆட்சிக்குழு கூறியுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான முக்கிய ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு கைது வாரண்ட் அறிவித்துள்ளது. அவர்களில் சிலர் இப்போது புதிய தேசிய ஒற்றுமை அரசாங்கத்தில் பதவிகளை வகிக்கின்றனர்.

மியான்மரில் 130’க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வ இன சிறுபான்மை குழுக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 63

0

0