முதன்முதலாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன கேப்சூலை பயன்படுத்தி விண்வெளிக்கு வீரர்களை அனுப்புகிறது நாசா..!!

14 November 2020, 11:26 am
space x - updatenews360
Quick Share

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ட்ராகன் கேப்சூலை பயன்படுத்தி நாசா முதன்முதலாக விண்வெளிக்கு வீரர்களை அனுப்புகிறது.

முதன்முதலாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன கேப்சூலை பயன்படுத்தி விண்வெளிக்கு வீரர்களை அனுப்புகிறது நாசா. ரெசிலியன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கேப்சூலில் 3 அமெரிக்க வீரர்களும், ஒரு ஜப்பானிய வீரரும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்கின்றனர்.

உள்ளூர் நேரப்படி நாளை இரவு 7.27 மணிக்கு புளோரிடாவின் கேப் கேனவரால் விண்வெளி மையத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படுகிறது.

இந்த ராக்கெட் 8 மணி நேர பயணத்திற்கு பின் சர்வதேச விண்வெளி மையத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தின் கேப்சூல் மூலம் நாசா வீரர்கள் பயணிப்பது இதுவே முதல்முறையாகும்.

Views: - 20

0

0