கனடாவின் காலிஸ்தான் சார்பு சீக்கிய அமைச்சர் ராஜினாமா..! ஊழல் குற்றச்சாட்டு அம்பலமானதால் விலகல்..!

16 January 2021, 7:38 pm
navdeep_bains_updatenews360
Quick Share

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடாவின் சீக்கிய அமைச்சர் நவ்தீப் பெய்ன்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்து, தனிப்பட்ட காரணங்களுக்காக அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

காலிஸ்தான் இயக்கத்தின் வலுவான ஆதரவாளராகக் கருதப்படும் நவ்தீப் பெய்ன்ஸ், தனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட விரும்புவதாகக் கூறி, கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இருப்பினும், உண்மையில், 2013 முதல் ஜஸ்டின் ட்ரூடோவின் முதல் ஆட்சிக் காலத்தில் முக்கிய பங்கு வகித்த நவ்தீப் பெய்ன்ஸ், கனடாவில் பெரிய ஊழல் முறைகேடு ஒன்றில் தொடர்பு கொண்டிருந்தது அம்பலமான பின்னர் அமைச்சரவையில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பெய்ன்ஸ் ராஜினாமா ஆளும் லிபரல் கட்சி ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

முன்னதாக நவம்பர் 2018’இல், கனடாவை தளமாகக் கொண்ட ஒரு செய்தி ஊடகம் நவ்தீப் பெயின்ஸ் சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரத்தை அம்பலப்படுத்தியது. அந்த அறிக்கையின்படி, நவ்தீப் பெயின்ஸுக்கும் மற்றொரு பாராளுமன்ற உறுப்பினர் ராஜ் க்ரூவலும் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு நிலம் தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். 

கனடா அரசாங்கத்திற்குள் ஆக்ரோஷமான காலிஸ்தானிய அனுதாபிகளில் ஒருவராக நவ்தீப் பெயின்ஸ் கருதப்படுகிறார் என்று கூறப்படுகிறது. சீக்கிய சமூகத்தை தீவிரமயமாக்குவதாகவும், அதைப் பிரிக்க முயற்சிகள் மேற்கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட காலிஸ்தானிய சார்பு தீவிர அமைப்பான உலக சீக்கிய அமைப்பு மூலம் பெய்ன்ஸ் வளர்த்தெடுக்கப்பட்டார்.

அவர் அமைச்சரவையிலிருந்து வெளியேறியதன் மூலம், கனடா அரசில் காலிஸ்தானிய தீவிரவாத சார்பு நிலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0