பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி 28 பேர் பலி : தசரா கொண்டாடச் சென்ற போது நிகழ்ந்த துயரச் சம்பவம்

Author: Babu Lakshmanan
13 October 2021, 1:30 pm
nepal-bus-accident - updatenews360
Quick Share

காத்மண்டு : நேபாளம் நாட்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

லும்பினி மாகாணத்தின் பேங்கி மாவட்டத்தில் இருந்து முகு மாவட்டத்தை நோக்கி, 45 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்தின் முன்பக்க டையர் திடீரென பஞ்சரானது. இதனால், நிலை தடுமாறிய பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 28 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் வெளியூர்களில் வேலை செய்து கொண்டு, தசாரா பண்டிக்கைக்காக சொந்த ஊர் சென்று கொண்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 165

0

0

Leave a Reply