கட்சியிலிருந்து சர்மா ஒலியை நீக்கியது செல்லாது..! நேபாள தேர்தல் ஆணையம் அதிரடி..!

25 January 2021, 12:16 pm
nepal_pm_kp_sharma_oli_updatenews360
Quick Share

நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (என்.சி.பி) பிளவுபட்டுள்ள நிலையில், பிரச்சந்தா தலைமையிலான குழு, இடைக்கால பிரதமர் கே.பி.சர்மா ஒலியை கட்சியிலிருந்து நீக்கிய ஒரு நாள் கழித்து, தேர்தல் ஆணையம் இந்த நீக்குதலை அங்கீகரிக்க மறுத்துவிட்டது.

ஊடகங்களுடன் பேசிய நேபாள தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ராஜ் ஸ்ரேஸ்தா, கே.பி.சர்மா ஒலியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி புதிய தலைவரை நியமிக்க முடிவெடுக்கும் போது, பிரச்சந்தா மற்றும் மாதவ் குமார் நேபாளம் தலைமையிலான பிரிவு கட்சியின் சட்டத்தை பின்பற்றத் தவறிவிட்டது என்று கூறினார்.

“அதேபோல், பிரச்சந்தாவை நிர்வாகத் தலைவர் பதவியிலிருந்து நீக்கவும், மத்திய குழுவை விரிவுபடுத்தவும் ஒலி பிரிவு எடுத்த முடிவும் கட்சி சட்டத்திற்கு எதிரானது.” என்று அவர் மேலும் கூறினார்.

அப்போது ஸ்ரேஸ்தா, இரு பிரிவுகளின் முடிவுகளும் கட்சியின் சட்டத்திற்கு ஏற்ப வரவில்லை என்பதால், நாங்கள் என்.சி.பியின் விவரங்களை புதுப்பிக்க முடியாது என கே.பி.சர்மா ஒலி மற்றும் பிரச்சந்தா ஆகியோருக்கு நாங்கள் அறிவித்துள்ளோம்.

பதவியில் இருக்கும் ஒருவரை நீக்க கட்சியின் சம்பந்தப்பட்ட குழு அல்லது ஆணையத்தின் மூன்றில் ஒரு பங்கு பெரும்பான்மை தேவை என்று கட்சியின் சட்டம் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Views: - 4

0

0