செல்போன் தொடுதிரையில் 28 நாட்கள் உயிர் வாழும் கொரோனா….எச்சரிக்கை..!!!

12 October 2020, 11:06 am
corona celphne - updatenews360
Quick Share

ஆஸ்திரேலியா: செல்போன் மற்றும் ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் 28 நாட்கள் உயிர்வாழும் என புதிய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

செல்போன் தொடுதிரையில் படரும் கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரை உயிர்வாழும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் செல்போன் பயன்படுத்துவோருக்கு வைரஸ் பரவும் பாதிப்பு அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

mobile-corona-updatenews360

வங்கிகள், ஏடிஎம்களில் பெறப்படும் பணம், கண்ணாடி போன்ற பொருட்களில் கொரோனா வைரஸ் 28 நாட்களுக்குக் கூட நீடித்திருக்கும் என்று ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மென்பொருட்கள் மீது படரும் வைரஸ் நீண்ட காலம் நீடித்திருக்கும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் சார்ஸ், கோவ்-2 வைரசின் ஆயுளை 3 வெப்பநிலைகளில் சோதித்தனர். வெப்பம் அதிகரித்தால் வைரஸ் உயிர்வாழும் விகிதங்கள் குறைந்து உள்ளன என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டுகள் மற்றும் மொபைல்கள் போன்ற பொருட்களில் கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரை குளிர்ந்த, இருண்ட நிலையில் வாழ முடியும் என்று ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த வெப்பநிலையில் 14 நாட்கள் வரை மற்றும் அதிகபட்சமாக 16 மணி நேரத்திற்கும் குறைவாக உயிர்வாழும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய ஆய்வுகளை விட இந்த ஆய்வில் கொரோனா வைரசின் வாழ்நாள் காலம் கணிசமாக நீண்டுள்ளது தெரியவந்துள்ளது.

Views: - 54

0

0