பாகிஸ்தான் வரலாற்றில் முதல் பெண் லெப்டினன்ட் ஜெனரல்..! நிகர் ஜோஹரை நியமித்தது பாகிஸ்தான் ராணுவம்..!

1 July 2020, 12:29 am
nigar_johar_updatenews360
Quick Share

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக, பாகிஸ்தான் ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரல் பதவிக்கு ஒரு பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் நிகர் ஜோஹர் லெப்டினன்ட் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்ட பாகிஸ்தானின் முதல் பெண் அதிகாரியாக மாறியுள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தின் முதல் பெண் லெப்டினன்ட் ஜெனரலாக ஜோஹர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜோஹரின் பதவி உயர்வை உறுதிசெய்து, இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ஐ.எஸ்.பி.ஆர்) இயக்குனர் ஜெனரல் மேஜர் ஜெனரல் பாபர் இப்திகார் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “மேஜர் ஜெனரல் நிகர் ஜோஹர், எச்ஐ (எம்) லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார். லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற முதல் பெண் அதிகாரி அவர். பாக் இராணுவத்தின் முதலாவது பெண் சர்ஜன் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். லெப்டினன்ட் ஜெனரல் நிகர் ஜோஹர் மாவட்ட ஸ்வாபி கே.பி.கே.வின் பஞ்ச்பீரைச் சேர்ந்தவர்.” என்று கூறியுள்ளார்

லெப்டினன்ட் ஜெனரல் நிகர் ஜோஹர் 2017’இல் ஒரு மேஜர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் மேஜர் ஜெனரல் பதவியை அடைந்த மூன்றாவது பெண் அதிகாரியானார்.

ஜோஹரின் தந்தை கர்னல் காதிர் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ’யில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.