கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஓமனில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்…!!!

Author: Aarthi
11 October 2020, 9:46 am
oman- updatenews360
Quick Share

மஸ்கட்: கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தடுக்கும் நடவடிக்கையாக ஓமனில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

ஓமனில் கொரோனா பாதிப்பை தடுக்க அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மட்டும் செயல்பட விலக்கு அளிக்கப்பட்டது.

நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதையடுத்து அனைத்து பணிகளும் இயல்பு நிலைக்கு திரும்பின. மேலும் நகரங்களுக்கு இடையில் பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகளும் விலக்கி கொள்ளப்பட்டது.

இந்நிலையில், தினந்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. எனவே, பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேரத்தில் ஊரடங்கை மீண்டும் அமல்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை, இன்று முதல் வருகிற 24-ந் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்கள் முழுவதுமாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் அவர்களது புகைப்படம் மற்றும் விவரம் ஆகியவை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை கொரோனா குறித்து கண்காணித்து வரும் சுப்ரீம் கமிட்டி வெளியிட்டுள்ளது.

Views: - 41

0

0