தடுப்பூசி போட்டுக்கொண்டால் தான் ஹஜ் பயணத்திற்கு அனுமதி..! சவூதி அரசு அதிரடி அறிவிப்பு..!

6 April 2021, 9:14 pm
Haj_Pilgrimage_UpdateNews360
Quick Share

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்ட யாத்ரீகர்கள் மற்றும் வழிபாட்டாளர்கள் மட்டுமே மக்காவில் உள்ள கிராண்ட் மசூதிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது.

உம்ராவுக்கான அனுமதி (மக்காவிற்கு இஸ்லாமிய யாத்திரை) மற்றும் கிராண்ட் மசூதியைப் பார்வையிட இரண்டு முறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், மதீனா மற்றும் மக்கா வருகைக்கு குறைந்தது 14 நாட்களுக்கு முன்னர் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றவர்கள் மற்றும் வைரஸ் தொடரிலிருந்து குணமாகியவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

பயணத்தைத் தொடங்குவதற்கு முன், பார்வையாளரின் தடுப்பூசி நிலையை சவுதி அரேபியாவின் கொரோனா செயலியான தவக்கல்னாவில் பதிவு செய்ய வேண்டும். இது கடந்த ஆண்டு சவூதி அரேபியாவின் கொரோனா நிலைமையைக் கண்டறிய தொடங்கப்பட்டது.

இரண்டு மசூதிகளையும் பார்வையிட அல்லது உம்ரா செய்ய விரும்பும் மக்கள் தவக்கல்னா செயலி மற்றும் உம்ரா செயலியான ஈட்மர்னா வழியாக பதிவு செய்ய வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரண்டு செயலிகளும் உண்மையான அனுமதிகளை வழங்கும் ஒரே தளங்கள் என்று அது மேலும் கூறியது. ரமலான் செயல்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 10,000 கிராண்ட் மசூதி தொழிலாளர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அரபு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Views: - 0

0

0

Leave a Reply