தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை: பிரிட்டன் அரசு அறிவிப்பு..!!

8 July 2021, 7:00 pm
flight_updatenews360
Quick Share

லண்டன்: தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்குத் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளிலிருந்து பிரிட்டன் விலக்கு அளிக்க உள்ளது.

ஐரோப்பிய நாடுகளிலேயே ரஷ்யாவுக்குப் பின்னர் பிரிட்டனில்தான் அதிகப்படியான கோவிட் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. பிரிட்டனில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இருந்தும் அங்கு வரும் 19ம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், பிரிட்டன் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் இன்று கூறுகையில், 15 மாதங்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகளுக்காகப் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன.

கோவிட் தொற்று மிதமாக உள்ள நாடுகளிலிருந்து வரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்த திட்டமிட்டு உள்ளோம் என்றார்.

Views: - 190

0

0