“பாகிஸ்தானில் அனைவரும் பயந்தாங்கொள்ளிகள்”..! ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் அதிரடி..!

30 September 2020, 3:40 pm
Sajjad_Raja_UpdateNews360
Quick Share

பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்-என்) பிரிவின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப்பைக் கைது செய்வது தொடர்பாக கில்கிட்-பால்டிஸ்தான் தலைவரும் சமூக ஆர்வலருமான சஜ்ஜாத் ராஜா பாகிஸ்தான் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இராணுவ தளபதிகளைத் தொட இங்கு யாருக்கும் தைரியமில்லை என்றும், அரசு எதிர்கட்சித் தலைவர்களை கைது செய்வதில் மும்முரமாக உள்ளது என்றும் தெரிவித்தார். 

“பாகிஸ்தான் நீதித்துறை மற்றும் அரசு என யாரும் இராணுவ தளபதிகளைத் தொடும் துணிவு கொண்டவர்கள் அல்ல. எதிர்க்கட்சிகளைத் துன்புறுத்துவதில் மட்டுமே அரசு மும்முரமாக உள்ளது” என்று தேசிய சமத்துவக் கட்சியின் தலைவர் சஜ்ஜாத் ராஜா ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

பி.எம்.எல்-என் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப்பை நாட்டின் ஊழல் தடுப்பு கண்காணிப்புக் குழுவான தேசிய பொறுப்புக்கூறல் பணியகம் (என்ஏபி) கைது செய்ததன் பின்னணியில் இந்த அறிக்கை வந்துள்ளது.

பி.எம்.எல்-என் துணைத் தலைவர் மரியம் நவாஸின் ட்வீட்டை டேக் செய்த பின்னர் ராஜா இந்த கருத்துக்களை வெளியிட்டார். அதில் மரியம் நவாஸ் “பாகிஸ்தானில் பொறுப்புணர்வும் நீதியும் இருந்திருந்தால், ஷாபாஸ் ஷெரீப் அல்ல, ஆனால் அசிம் சலீம் பஜ்வா மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டிருப்பார்கள்.” எனத் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக செயல்பட விரும்புவோருக்கு ஏற்றவாறு நடக்க மறுத்ததால் எதிர்க்கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டார் என்று திங்களன்று மரியம் நவாஸ் கூறினார்.

பாகிஸ்தானில் உள்ள முக்கிய எதிர்க்கட்சிகள் பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவரது உயர்மட்ட உதவியாளர் லெப்டினென்ட் ஜெனரல் அசிம் சலீம் பஜ்வாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரி பாகிஸ்தானில் உள்ள முக்கிய எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்த பின்னர் அதை முடிவுக்கும் வகையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.