அடுத்தடுத்த ஏவுகணை சோதனை: வடகொரியாவுக்கு கண்டனம் தெரிவித்த ஜப்பான்..!!

Author: Aarthi Sivakumar
19 October 2021, 12:15 pm
Quick Share

பியாங்யாங்: வட கொரியா மீண்டும், மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதை தென் கொரியாவும், ஜப்பானும் உறுதி செய்ததுடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வட கொரியாவிடம் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தவாறு ஏவுகணையை ஏவும் வசதி இருக்கிறது. வட கொரியா அதனைப் பயன்படுத்தி தற்போது ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது.

latest tamil news

நாங்கள், அமெரிக்கப் படைகளுடன் இணைந்து வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனையை கூர்ந்து கவனித்து வருகிறோம் என தென் கொரிய கூட்டுப்படைகள் தலைவர் தெரிவித்துள்ளார். கொரிய போர் முடிவுக்கு வந்தாலும் இன்னமும் இருநாடுகளுக்கும் இடையே சுமுகமான சூழ்நிலை ஏற்படாததால், தென் கொரியா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது.

ஆனால், பேச்சுவார்த்தைக்கு இத்தகைய ஏவுகணை சோதனைகள் முட்டுக்கட்டையாக அமையும் என சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, ஜப்பானின் புதிய பிரதமர் புமியோ கிஷிடா தெரிவிக்கையில், வட கொரியா இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. வட கொரியா சமீப காலமாகவே அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை செய்து வருவது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

latest tamil news

Views: - 450

0

0