கொரோனா பீதி..! சொன்னதை செய்த குழந்தைசாமி..! எல்லையில் போட்டுத் தள்ளிய வடகொரியா ராணுவம்..!

24 September 2020, 3:06 pm
Kim_Jong-Un_UpdateNews360
Quick Share

சர்வாதிகாரத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் வடகொரியா, தற்போது கொரோனா பீதியிலும் சிக்கித்தவிக்கிறது. கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள எல்லைகளை மூடியதோடு மட்டுமல்லாமல் வெளியிலிருந்துஎல்லையில் அத்துமீறும் நபர்களை சுட்டுக்கொள்ளவும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்திருந்தார். இது வெறும் எச்சரிக்கைக்காக மட்டுமே இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் அதை செயலிலும் காட்டி அதிர வைத்துள்ளார்.

தென்கொரியாவின் மேற்கு எல்லைத் தீவான யியோன்பியோங்கிற்கு அருகே தென்கொரியாவுக்கு சொந்தமான ஒரு கப்பலில் ரோந்து சென்ற நபர் ஒருவர் எதிர்பாராத விதமாக கடலில் விழுந்துள்ளார. இதையறியாத ரோந்துக் குழுவினர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

உடலில் லைப் ஜாக்கெட்டுடன் தண்ணீரில் அவர் தத்தளித்த நேரத்தில் வடகொரிய வீரர்கள் அவரைக் கண்டுள்ளனர். தான் வடகொரிய எல்லைக்குள் இருப்பதை உணரவில்லையோ என்னவோ, தன்னைக் காப்பாற்றத்தான் வருகிறார்கள் என எண்ணி கடலில் தத்தளித்த நபர் நிம்மதியடைந்தார்.

ஆனால் அங்கே சென்ற வடகொரிய வீரர்களோ, கொரோனா பீதியின் காரணமாக தண்ணீரில் மிதந்த அவரிடம் அங்கேயே விசாரணை நடத்தி விட்டு, தண்ணீரிலேயே சுட்டும் கொன்றுள்ளனர்.

சுட்டுக் கொன்ற பிறகும் பீதி குறையாத வடகொரிய வீரர்கள், அவர் மீது எண்ணையை ஊற்றி அங்கேயே எரித்து தடம் தெரியாமல் ஆக்கிச் சென்றுவிட்டனர். 

இந்த செய்தி எப்படியோ வெளியில் கசிந்து விட, தற்போது வடகொரிய எல்லையை நெருங்கவே அண்டை நாட்டினர் அச்சம் கொள்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் என்னதான் வடகொரிய அதிபரை குழந்தைசாமி என கிண்டல் செய்தாலும், தான் ஒரு கொடூர சாமி என அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் மூலம் கிம் ஜோங் உன் நிரூபித்திக்கொண்டே தான் உள்ளார்.

Views: - 12

0

0