“விரைவில் குணமடைந்து வாருங்கள் டிரம்ப்”..! எதிர்பாராத இடத்திலிருந்து வந்த வாழ்த்துச் செய்தி..!

Author: Sekar
3 October 2020, 4:23 pm
trump_kim_jong_updatenews360
Quick Share

கொரோனா நோயிலிருந்து விரைவில் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் குணமடைய வேண்டும் என்று விரும்புவதாக வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் அவர்களுக்கு செய்தி அனுப்பியதாக வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“அவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று கிம் ஜோங் உன் நம்புகிறார். அவர்கள் விரைவில் குணமடைய தனது அன்பான வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார்” என்று கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிரம்ப் நேற்று தானும் அவரது மனைவியும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக வெளியிட்ட செய்தியை அடுத்து, உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் அமெரிக்க அதிபர் மற்றும் அவரது மனைவிக்கு விரைவில் குணமடைய நல்லெண்ண செய்திகளை அனுப்பி வருகின்றனர்.

2017’ஆம் ஆண்டில் வட கொரியா அமெரிக்காவின் நிலப்பரப்பில் அணுசக்தித் தாக்குதல்களை நடத்தும் திறனைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான உயர்மட்ட ஆயுத சோதனைகளை மேற்கொண்ட பின்னர் கிம் மற்றும் டிரம்ப் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தைக்கு முன்னர், வட கொரியா மீது தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் கூறியதோடு, கிம் ஒரு தற்கொலை தாக்குதலுக்குத் தயாராகும் சிறிய ராக்கெட் மனிதன் என்று கேலி செய்தார். அதே நேரத்தில் கிம் ஜோங் உன் இதற்கு பதிலடியாக மனநலம் பாதிக்கப்பட்ட யுஎஸ் எனக் கூற இரு நாடுங்களிடையே வார்த்தைப் போர் நீண்டது.

ஆனால் அவர்கள் அத்தகைய சொற்களை பயன்படுத்துவதை திடீரென நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக கிம் திடீரென டிரம்பை அணுகிய பின்னர், இருவரும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.

ஜூன் 2018’இல் சிங்கப்பூரில் ஒரு உச்சிமாநாட்டிலிருந்து தொடங்கி அவர்கள் இது வரை மூன்று முறை சந்தித்துள்ளனர். இதன் மூலம் 1950-53 கொரியப் போரின் முடிவில் இருந்து வட கொரியா தலைவரைச் சந்தித்த முதல் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் ஆனார்.

ஆனால் வட கொரியா மீதான அமெரிக்கா தலைமையிலான பொருளாதாரத் தடைகள் தொடர்பான சர்ச்சைகளைத் தொடர்ந்து வியட்நாமில் அவர்களின் இரண்டாவது உச்சிமாநாடு எந்த ஒப்பந்தமும் இல்லாமல் முடிவடைந்ததிலிருந்து அவர்களின் கூட்டங்கள் சிறிதளவு முன்னேறவில்லை.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனாவிலிருந்து குணமடைய டிரம்புக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

Views: - 36

0

0