பாஸ்போர்ட் புதுப்பிக்க இனி இரண்டு நாட்கள் மட்டுமே..! ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..!

1 August 2020, 10:52 pm
Passport_UpdateNews360
Quick Share

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்தியர்கள் இப்போது தங்கள் பாஸ்போர்ட்டுகளை இரண்டு நாட்களில் புதுப்பித்துக் கொள்ளும் புதிய செயல்பாட்டு நடைமுறை ஆகஸ்ட் முதல் நடைமுறைக்கு வரும் என்று ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இந்தியர்களிடமிருந்து பாஸ்போர்ட் விண்ணப்பங்களை ஏற்க முடியும் என்று கல்ப் நியூஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, ஒவ்வொரு அமீரகமும் சரிபார்ப்புக்கான தனிப்பட்ட மையத்தைக் கொண்டிருந்தன.

பாஸ்போர்ட் புதுப்பித்தல் படிவங்கள் பெறப்பட்ட அதே நாளில் செயல்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று துபாயில் உள்ள இந்திய துணைத் தூதர் டாக்டர் அமன் பூரி தெரிவித்தார்.

எனினும் சில விண்ணப்பங்களுக்கு ஏதேனும் ஆவணங்கள், விசாரணைகள் தேவைப்பட்டால் அதிக நேரம் ஆகலாம் என்று பூரி கூறினார்.

“போலீஸ் சரிபார்ப்பு அல்லது இந்தியாவில் இருந்து வேறு ஏதேனும் அனுமதி போன்ற சிறப்பு ஒப்புதல்கள் தேவைப்பட்டால், இது நீண்ட நேரம் எடுக்கும். சராசரியாக இரண்டு வாரங்கள் ஆகும்” என்று அவர் விளக்கினார்.

Views: - 2

0

0