ரஷ்யாவில் தீவிரமடையும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் இத்தனை உயிரிழப்பா?

12 November 2020, 5:16 pm
Delhi Corona- Updatenews360
Quick Share

மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.58 லட்சத்தை கடந்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை 5 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 12.91 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று வெகுவாக அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா தற்போது 5வது இடத்தில் உள்ளது. அங்கு, கடந்த 24 மணி நேரத்தில் மேலும், 21,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது, 18, 58,568 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மேலும் 439 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 032 ஆக உயர்ந்துள்ளது.

Views: - 23

0

0